(Reading time: 7 - 14 minutes)
Vatam pidikka vaanga, Japanukku - Sa.Vi
Vatam pidikka vaanga, Japanukku - Sa.Vi

Flexi Classics தொடர்கதை - வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! - 03 - சாவி

   

ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் வீட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சுண்டுவிரலில் முடித்தார்.

   

”இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டைவிரல்லேருந்து எண்றீங்க! இது எந்த ஊர் வழக்கம்?" என்று கேட்டார் முத்து.

   

”இது ஜப்பான் நாட்டு வழக்கம். நாமெல்லாம் சுண்டு விரல்லே ஆரம்பிச்சு கட்டை விரல்லே முடிப்போம். இங்கே கட்டைவிரல் தான் முதல் நம்பர் ! பி எ ரோமன் வென் யு ஆர் இன் ரோம்!" என்றார் புள்ளி சுப்புடு.

   

'சரி; அஞ்சுங்கறது என்ன கணக்கு?" - முத்து கேட்டார்.

   

"இன்னைக்கு அஞ்சாவது நாள் இண்டியன் பாங்க் சேர்மன் கோபாலகிருஷ்ணன் வரார். ஆறாவது நாள் காலையில ஒன்பது மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம். பந்தக்கால் நுனியில் மாவிலை கட்டி மங்கள வாத்திய இசையோட கோபாலகிருஷ்ணன் ஊன்றி வைப்பார். ராசியான கை!"

   

'பந்தக்காலா? அது எதுக்கு!"

   

'அரண்மனை கிழக்கு வாசல்லேதான். தேரோட்டம் தொடங்கப் போறோம். அந்த இடத்துலயே வேற ஒரு ஸைட்ல ஷாமியானா போட்டு தேர் ஃபெஸ்டிவல் ஆபீஸ் அமைக்கணும். தேரோட்டம் சம்பந்தமான எல்லா ஏற்பாடுகளையும் அந்த ஆபீஸ்தான் கவனிச்சுக்கும்."

   

"கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க..”

   

”முதல்ல ஸ்பெஷல் கொடி ஒண்ணு தயார் செய்யணும். அப்புறம், ஸ்டாம்ப் ரிலீஸ் கல்ச்சுரல் புரோக்ராம். என்கொயரி ஆபீஸ்னு இப்படி எத்தனையோ ஐட்டம் இருக்கே!" என்றார் முத்து.

   

"நாங்க ரெண்டு பேரும் இப்பவே தேரடிக்குப் போறோம். முதல்லே தேரை ரிப்பேர் செய்யணும். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.