"ஆமாம்” என்று ஒப்புக்கொண்டார் புள்ளி பயந்தபடி.
”என்ன பண்ணீங்க?"
”ஆனியன் சாம்பார்” என்று கோடி மோச்சி உண்மையைச் சொல்ல, அப்படியா! ”வாசனை பிரமாதம்! நாக்ல ஜலம் ஊறுது. எனக்கும் கொஞ்சம் சாம்பார் கொடுப்பீங்களா?" என்று கேட்டாள்.
"அம்மாடியோ! தப்பிச்சோம்" என்று எண்ணிக்கொண்ட மனோரமா, ஒரு பாத்திரம் நிறைய சாம்பார் எடுத்துக் கொடுத்தனுப்பினார். அங்கேயே ஒரு ஸ்பூன் சாம்பாரை வாயில் ஊற்றிச் சாப்பிட்டுப் பார்த்த வீட்டுக்காரி ”ரொம்ப டேஸ்ட்டா யிருக்கு! வெரிகுட் தினமும் நீங்க இங்கேயே சமையல் செஞ்சுக்குங்க. எனக்கும் கொஞ்சம் சாம்பார் கொடுத்துட்டுப் போங்க. ஆமாம்!" என்று ஒரு உத்தரவு போல் சொல்லிவிட்டுப் போனாள்.
மனோரமாவுக்கும் மற்றவர்களுக்கும் அப்போதுதான் போன மூச்சு திரும்பி வந்தது
நாலு பேரும் மகிழ்ச்சி தாங்காமல், "அம்மாடி!" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
”நாளைக்கு என்ன சமையல் மீன் குழம்பு வச்சிரலாமா?” என்று கேட்டார் மனோரமா தைரியத்தோடு.
”மீன் தான் ஜப்பானியர்களின் முக்கிய உணவு. இந்த நாட்டின் உணவுத் தேவையை 60% மீன் தான் பூர்த்தி செய்கிறது. பாதிப்பேர் பச்சையாகவே சாப்பிட்டுருவாங்க" என்றார் புள்ளி.
# # #
நன்னன் உயினோ பார்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்ச் சப்பரத்தின் மீது ஏறி அமாந்து ஏதோ எழுதிக்கொண் டிருந்தார்.