(Reading time: 8 - 15 minutes)
Vetha Vithu - SaVi
Vetha Vithu - SaVi

ரூபமான வேதத்தைக் காது வழியாக் கேட்டுதான் மனப்பாடம் செய்யணும். அப்படிக் தான் அது வழிவழியா வந்திருக்கு. ஒரு அட்சரத்தின் சப்தம் கூடப் பிசகக்கூடாது. பிசகினால் அர்த்தம் அனர்த்தமாயிடும், வேதத்துக்கு ஸ்வரம் உண்டு. அதில் அபஸ்வரம் பேசக்கூடாது. உச்சரிப்பு, ஸ்வரம், ஆரோகணம் அவரோகணம் இதெல்லாம் எழுத்தாலே சாத்தியப்படுமா? நீ சின்னப் பையன். இதெல்லாம் உனக்கு விளங்காது. போய் வேதத்தை ஓது! எழுதாதே! தினமும் ஒரு ஆவிருத்தியாவது வேதத்தை வாய்விட்டுச் சொல்லு. வேதம் ஓதறபோது பாதில விட்டுட்டு அங்கே இங்கே எழுந்து ஓடக் கூடாது. போ, போ" என்றார் கனபாடிகள்.

   

“மூர்த்தி பாதில விட்டுட்டு ஓடிப் போயிட்டானே!" என்றான் அந்த அசட்டுப் பையன்,

   

அந்தப் பையனின் வெகுளித்தனமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

   

"நீ போடா!" என்றார்.

   

”பாகீ! ஏன் தலையை வாராமல் சிக்காக்கி வச்சிண்டிருக்கே? இப்படி வந்து உட்காரு. தாழம்பூ என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமே! உனக்காகவே நல்ல வாசனைத் தாழம்பூவா வாங்கிண்டு வந்திருக்கேன். அழகாப் பின்னி விட்டுடறேன், வறயா?" என்றாள்.

   

"ஐயோ, வேணாம் அத்தை ! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்காத பாவியாயிட்டேன். இந்த உலகத்துல சிறுமைப்படவே இந்தப் பெண் ஜன்மம் எடுத்திருக்கேன், நேத்தே முடிவு பண்ணிட்டேன். இனி அப்பாவுக்கு என்னால எந்த அவமானமும் வரக்கூடாது. அதுக்கு நான் காரணமாயிருக்க மாட்டேன்."

   

"சீ, அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே! நீ சின்னக் குழந்தை. அறியாப்பருவத்தில் உனக்குத் தெரியாமலே எல்லாம் நடந்து போச்சு. அதுக்கு நீ என்ன செய்வே? உன்

   

அம்மா கடைசியா என் கிட்ட என்ன சொல்லிட்டுப் போயிருக்கா தெரியுமா? "அக்கா! நீங்கதான் பாகீரதியைப் பார்த்துக்கணும், அவள் கண் கலங்காம சந்தோஷமா இருக்கணும். தலைவிதி அவளை இந்த கதிக்கு ஆளாக்கிடுத்து. மத்த பெண்களைப் போல அவளுக்கும் ஆசைகள் இருக்காதா? சந்தோஷம் வேணாமா? உங்க அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சதா வேதம், 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.