Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
குழந்தைகள் சிறப்பு சிறுத் தொடர் - கோக்கு மாக்கு கோபாலு - 01  - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote
Pin It

01. கோக்கு மாக்கு கோபாலு - ஜான்சி

Gopaalu

ஹாய் குட்டீஸ்,

உங்க எல்லோருக்காகவும் நான் ஒரு கதைச் சொல்லப் போறேன். 

ரு ஊரிலே கோபாலு கோபாலுன்னு ஒரு பையன் இருந்தானாம். அவன் எந்த செயலைச் செஞ்சாலும் அது ஏதாவது பிரச்சினையில தான் கொண்டு போய் விடும். அவனை நினைச்சு அவன் அம்மா அப்பாவுக்கு ஒரே கவலைதான். கவலைனு மட்டுமில்ல இவன் எந்த நேரம் என்ன செஞ்சு வைப்பானோன்னு உள்ளூர ஒரே பயமும் கூட.

ஒரு நாள் அவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். என்னச் செய்வது என்றுப் புரியாமல் வீட்டில் இருந்த அரிசிப்பொரியை எடுத்து நறுக் மொறுக்கென்றுச் சாப்பிடத் தொடங்கினான். அதே நேரம் அவர்கள் ஓலைக் கூரையில் இருந்த எலியும் ஓலையைக் கடிக்க ஆரம்பித்தது. இவன் வாயில் பொரியைப் போட்டு கடிக்கையில் எலியும் ஓலையைக் கடிக்கும், இவன் அமைதியாக இருக்கும் போது எலியும் அமைதியாகி விடும்.

நறுக் மொறுக்……

கர்ச் கர்ச்.

……………………

………….

நறுக் மொறுக்……

கர்ச் கர்ச்.

……………………..

……………….

நறுக் ……

கர்ச்………. 

மொறுக்……

கர்ச். 

நறுக் மொறுக்…… நறுக் மொறுக்

கர்ச் கர்ச்……. ……….. கர்ச் கர்ச்

………

…………………

நறுக் மொறுக்……

கர்ச் கர்ச்.

நறுக் மொறுக்…… நறுக் மொறுக்

கர்ச் கர்ச்……. ……….. கர்ச் கர்ச் 

நறுக் மொறுக்…… நறுக் மொறுக்……… நறுக் மொறுக்…… நறுக் மொறுக்

கர்ச் கர்ச்……. ……….. கர்ச் கர்ச்……… கர்ச் கர்ச்……….. கர்ச் கர்ச் 

எலி தன்னை நக்கல் செய்வதாக அவனுக்கு தோன்றிவிட்டது. கையில் இருந்த பொரியை தின்ன வேண்டும் என்ற எண்ணம் மாறி அந்த எலியை கொல்லாமல் விடக் கூடாது என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

உடனே வீட்டிலிருந்த கிண்ணம் கிளாஸை கூரையில் எறிந்துப் பார்த்தான். ஆனால், அந்த எலி அங்கிருந்து நகருவேனா? என அவனுக்கு போக்குக் காட்டியது. கோபம் தாங்காமல் அவன் அடுப்படியில் இருந்த எறிந்துக் கொண்டிருந்த கொள்ளிக் கட்டையை பிடுங்கி கூரையில் எறிந்தான். உடனே தீ வீட்டின் கூரையில் பற்றி விடவே வீடு முழுவதும் எரிந்துச் சாம்பலானது.

வயலில் வேலைச் செய்து திரும்பிய கோபாலின் பெற்றோர்கள், வீடு இருந்த இடமே தெரியாமல் கன்னங்கரேலென்று வெற்றுச் சுவர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்கள். இது தங்களுடைய மகன் வேலையாக இருக்கும் என்பதால், அவனிடம் பேசுவதும் எரிந்துப் போன அவர்கள் வீட்டின் அந்த கன்னங்கரிய சுவற்றில் முட்டுவதும் ஒன்றுதான் எனத் தெரிந்ததால் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை.

வீட்டை மறுபடிக் கட்டி ஓலைக் கூரைப் போடுவதற்கு தேவையான கம்புகளைச் சேகரிக்க அருகாமையிலுள்ளக் காட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே, அடுத்த நாள் தங்கள் வயலில் இருந்த மற்ற வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, பக்கத்து வயல்காரரிடம் தங்கள் வயலுக்கும் சேர்த்து நீர் பாய்ச்ச சொல்லி உதவியைக் கேட்டுக் கொண்டு, கட்டுச் சோற்றைக் கட்டிக் கொண்டு புறப்பட்டனர். கோபால்  அவர்களிடம் மிகவும் அடம் பிடிக்கவே அவனையும் கூட்டிச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனால், ஏற்கெனவே அவன் மேல் அவர்களுக்கு கோபம் இருந்ததால்,

“எங்க கூட வர்றது எல்லாம் சரிதான் ஆனால் அங்க வந்து ஏதாவது கோக்கு மாக்கு வேலைச் செஞ்சே மகனே, முதுகு தோலை உரிச்சு புடுவேன், ஆமா” என அவன் தந்தை அவனை மிரட்டித் தான் கூட்டிக் கொண்டுப் போனார்.

அவனா அமைதியாக இருப்பது??? அதானே…….. போகிற வழியிலேயே கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை திணறடித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பதில் சொல்லி சொல்லி களைத்துப் போனார்கள்.

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Jansi

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுத் தொடர் - கோக்கு மாக்கு கோபாலு - 01  - ஜான்சிSubhasree 2016-07-26 17:42
Nice jansi sis ... (y)
Gopalu vaalu payan door delivery aagitana?
Reply | Reply with quote | Quote
# AchoKiruthika 2016-07-26 16:53
Gobalu kalakkal ponga
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுத் தொடர் - கோக்கு மாக்கு கோபாலு - 01  - ஜான்சிChithra V 2016-07-25 22:46
Gopal pola veetuku oru kuzhandhai irundha podhum :P
Nice story (y)
Gopal enna aanan :Q:
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுத் தொடர் - கோக்கு மாக்கு கோபாலு - 01  - ஜான்சிAdmin 2016-07-25 16:04
Gopaalu sir romba nallavaraa irukkaare :)

Nijamave aathula thooki pottutaara avanoda appa. What happ next????
Reply | Reply with quote | Quote
# RE: குழந்தைகள் சிறப்பு சிறுத் தொடர் - கோக்கு மாக்கு கோபாலு - 01  - ஜான்சிMeera S 2016-07-25 10:21
Sema Vaalu paiyan than... Gopalu...
Aathukulla viluntha gopal aduthu enna kokku maaku velai seya poranu therinjuka waiting jansi mam....
Reply | Reply with quote | Quote
+1 # Funny FunnyChillzee Team 2016-07-24 18:44
Ha ha Gopaaaluu :D :D
Super Start sis (y) (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: குழந்தைகள் சிறப்பு சிறுத் தொடர் - கோக்கு மாக்கு கோபாலு - 01  - ஜான்சிThangamani.. 2016-07-24 13:00
haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaai Jansi..vishhhhhhhhh..vu......................i visiladikkiraen pa..kaettuchchaa?ai..jolly..kOkku maakku kOvaalu..
semaiya irukku...naanum oru kozhandhaiyaayittaen..
:yes: :clap:..nalla aarambam Jansi..
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top