(Reading time: 18 - 35 minutes)

“ம்மா.. என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” தவிப்புடன் அவன் கேட்க, சற்றுமுன் அவள் ஒப்பித்ததை போலவே ஒப்பித்தார் அவர்.

“ஏன்மா..பார்த்து வந்துருக்க கூடாதா? ஏதாச்சும் பெருசா ஆகி இருந்தா?”

“உன்னை இப்படி பார்த்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமா போகுற உயிர் ஒரேடியா போயிருக்கும்..”

“அம்மா!”

“பின்ன் என்னடா? எங்களுக்கும் இருக்குற்ச் ஒரே ஒரு பிள்ளை நீ. உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சு நீ நல்லா இருக்குறதை பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா?”

“முடியாதும்மா.. நான் பண்ணின தப்புக்கு நானே தரும் தண்டனை இது. அவ என்னை மன்னிச்சாத்தான் நான் மனம் மாறுவேன். அவளையே கல்யாணமும் பண்ணிப்பேன்.”

“சரிடா அவ அவனு மட்டும் சொல்லுறியே. அவ பேரு என்ன இப்போ எங்க இருக்கா? அதை சொல்லலாம்ல? எதையுமே என்கிட்ட மறைக்காதவன் இதை மட்டும் ஏன்டா சொல்லல?”

“சொல்லி என்ன ஆகப்போகுது? என்னாலயே அவளை கொண்டுவர முடியல. நீங்க மட்டும் என்ன பண்ணிட முடியும்? வீணாக இன்னும் அவளை நினைச்சு வேதனை படுவிங்க. வேணாம்மா.. நாலு வருஷமா நான் அனுபவிக்கிற வேதனை என்னோட போகட்டுமே!”

“அவ?நாலு வருஷம்? மன்னிப்பு? என்னைத்தான் சொல்லுறானா என்ன?” லேசாய் அதிர்ந்தாள் அவள். அதுவரை தன் அன்னையை காண்பதில் கவனமாக இருந்தவன் அப்போதுதான் அவளைப் பார்த்தான்.

“…” அவளின் பெயரை அவன் முணுமுணுக்க, உணர்ச்சி துடைத்த முகத்தைக் காட்டினாள் அவள்.

“மேடம், நான் வரேன்” என்று விருட்டென அவள் வெளியேற அவனும் அவளை பின் தொடர்ந்து ஓடினான். மகனின் முகத்தை வைத்து ஓரளவு யூகிக்க முடிந்தாலும் ஒருவித குழப்பத்துடனேயே இருந்தார் அத்தாய்! அவனை சந்திக்கும் எண்ணமில்லாமல், தனக்கென கொடுக்கப்பட்ட அறையில் உடையை மாற்றிவிட்டு கார்சாவியையும் கைப்பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அவள்.

வளின் பெயரை உரக்க உச்சரித்துக்கொண்டே அவன் நடந்தவன், அவள் காரில் ஏறி கிளம்புவதைப் பார்த்து தன் காரை கிளப்பினான். அதே மருத்துவமனையில் முதியவர்கள் இருவர், ஒருவரை ஒருவர் ஆதரவாக அணைத்துநின்ற காட்சி அவர்களின் விழிகளை கண்ணீரால் நிரப்பியது.

வரப்போவதில்லையா? இனி இப்படி ஒரு நாள் வரப்போவதில்லையா? இப்படி ஒரு வாழ்க்கையை வாழாமலே நாட்கள் கழிந்திடுமோ? ஏக்கமாய் விம்மியது இரு இதயமும்! அவர்களின் காரின் வேகத்தைவிட, நினைவலைகளின் வேகம் சீராக பின்னோக்கி பயணித்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு

டற்கரையில் அவன் அருகில் அமர்ந்திருந்தாள் அவள். அவனும் அவளும் சில நாட்களிலேயே நெருங்கிய நண்பர்களாகி இருந்தனர். அவர்களின் நட்பு வட்டாரம் பெரிது என்றாலுமே அவர்களுக்குள்ளே தனியொரு நட்பு அழகாய் பூத்திருந்தது. சில சமயம் அந்த நட்பு காதலென அவள் மனதில் கண்ணாமூச்சியும் ஆடியது?

தவறா என்ன? நண்பன் மீது காதல் வரக்கூடாதா? நம்பிக்கை இருக்கும் இடத்தில் காதல் மேலோங்கிடும்.  அவளுக்கு அவன்மீது அப்படியொரு நம்பிக்கை! அதுவே காதலுக்கும் அஸ்திவராமாகியது.

“ச்ச.. லைஃப் போர் அடிக்கிது டீ”

“ஏன்டா?”

“லவ் பண்ண ஒரு பொண்ணு கூட கிடைக்கலயே!” சலிப்பாக அவன் சொல்ல அவள் உள்ளம் படபடத்தது. “எதுக்கு சம்பந்தமே இல்லாமல் காதலை பத்தி பேசுறான்? ப்ரொபோஸ் பண்ண போறானா? இந்த மூஞ்சியில எதையும் கண்டுபிடிக்கவே முடியலையே. சரி நாமளேகொஞ்சம் எடுத்துகொடுப்போம்” என்று தனக்குள் பேசிக்கொண்டவள்,

“பொண்ணு கிடைக்கலயா? இல்லை லவ்வ சொல்ல உனக்கு தைரியம் இல்லையா?”என்று சீண்டினாள்.

“அடிங்க! யாருக்கு டீ தைரியம் இல்ல? எனக்கு லவ் வந்தா உடனே சொல்லிடுவேன்..”

“ஹும்கும்.. சரி அப்போ விடு. அது வரும்போது வரட்டும். நீயா தேடி போனா அது சொதப்பிடும். வெயிட் பண்ணு” என்றாள் அவள்.

“ ஹ்ம்ம் நீ சொல்லுறதும் சரிதான். ஆனா எனக்கு சினிமால காட்டுற மாதிரி பாத்ததுமே காதலை சொல்லுறது, உடனே கல்யாணம் அதெல்லாம் செட் ஆகாது. முதல்ல அவ எனக்கு ப்ரண்ட் ஆகனும். அவளை நானும் என்னை அவளும் புரிஞ்சுக்கனும். ஒருத்தருக்கொருத்தர் அன்பை பகிர்ந்து அப்பறமாத்தான் காதலையே சொல்லனும்” என்றான் அவன்.

“அப்போ நீ என்னைத்தான் லவ் பண்ணனும்!” என்று மனதில் இருப்பதை கேலியான குரலில் போட்டு உடைத்தாள் அவள்.

“ஹா ஹா. காமிடி பண்ணுறியா? உனக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? போடீ” என்று சிரித்தான் அவன். அவன் சிரிப்பு அவளுக்குள் லேசாய் எரிச்சலை மூட்டியது.

“இப்போ என்ன காமிடி பண்ணிட்டேன்னு நீ சிரிக்கிற?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.