(Reading time: 18 - 35 minutes)

“..”

“நீ என்னை நினைச்ச? நானும் உன்னை மாதிரின்னா? யெஸ் நீ ரொம்ப அழகா இருக்க; ஹீரோ மாதிரி இருக்க! சோ வாட்? உன்னால உலகம் ரிவர்ஸ்ல சுத்த போகுதா? இது பாரு உன்கிட்ட நிறைய நல்லகுணம் இருக்கு. குடும்பத்து மேல பாசமா இருக்க, ப்ரண்ட்ஸ்கிட்ட உண்மையா இருக்க, எதையும் மூடி மறைக்காம நேர்மையா பேசுற.. இதெல்லாம்தான் உன்கிட்ட எனக்கு புடிச்சது.நீ எப்படி இரூந்தாலும் நான் உன் மேல இப்படித்தான் பாசமா இருந்துருப்பேன்..”

“..”

“ஏன்னா உன்ன பொறுத்த வரைக்கும் அழகு முகத்துல இருக்கு..எனக்கு மனசுல இருக்கு. நீ உன்ன சுத்தி ஆயிரம் பேரை வெச்சுக்கோ, ஆனா யாரு உன்மேல உண்மையான பாசம் காட்டுறாங்கனு புரிஞ்சுக்க போராடனும். ஆனா எனக்கு அப்படி இல்ல.. என்கூட மனசார பழகினா மட்டும்தான் கடைசிவரை என்னோட இருப்பாங்க..”

“..”

“உன்னப்பத்தி எல்லா விஷயமும் புரிஞ்சிக்கிட்ட நான் இங்க தப்பு பண்ணிட்டேன். உன்னை போயி காதலிச்சேன் பாரு. அதுக்கான அர்த்தம் புரியும்போது நான் உன் கண்ணுல படவே மாட்டேன்.. ஜஸ்ட் கெட் லாஸ்ட்” என்றுவிட்டு அவனை திரும்பியும் பார்க்காமல் சென்றிருந்தாள் அவள்.

அடுத்த நான்கு வருடங்களில் அவன் கண்களில் படாமல் தன் போக்கில் இருந்தாள் அவள். அவள் சென்ற பாதையில் எல்லாம் அவளுக்கு வெற்றித் தான் கிட்டியது. என்னத்தான் இருந்தாலும் அவன் தனது முதல் காதல் என்ற எண்ணம் அவளின் உள்ளத்தை அவ்வப்போது இரணப்படுத்ததான் செய்தது. எதற்கும் தயங்காமல் ஓடி ஒளியாமல் எதிர்நோக்கினாள். அழுவதற்கு தயங்கவில்லை; அழுது முடித்ததும் மீண்டும் மீண்டெழவும் தயங்கவில்லை!

இன்னொரு பக்கம் அவனது வாழ்க்கையோ மொத்தமாய் மாறி இருந்தது. அவள் விட்டுச் சென்ற சில நாட்கள் அவன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை. அவளே மீண்டும் வந்து பேசுவாள் என்று நினைத்தான். நாட்கள் ஆக ஆக அவன் வாழ்க்கையிலும் ஏமாற்றங்கள். தோற்றதிற்கு  மயங்கி தோற்றும் போனான். அவன் வருந்தி அவளைத் தேடிய நேரம் அவளோ எங்கேயோ சென்றிருந்தாள். இதோ நான்கு வருடங்களாக அவளைத் தேடியே கழித்தான்.

தே கடற்கரை! அவன் தன்னை பின்தொடர்வதை கவனித்தவள் காரை அதே இடத்திற்கு செலுத்தினாள். கார் கதவை அறைந்து சாத்திவிட்டு, அவனை பார்த்து முறைத்துவிட்டு கடல் அலைகளில் கால் நனைக்க ஓடினாள். அவளது முறைப்பை சம்மதமாக எடுத்துக் கொண்டு அவனும் பின்னே ஓடினான். அவளது பெயரை சொல்லி அழைத்தான்.

“என்ன வேணும்?”

“என்னை மன்னிச்சிரு..உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?”

“நான் தேட சொல்லலியே!”

“என்னை மன்னிக்கவே மாட்டியா?”

“மன்னிக்கிறதுக்கும் மன்னிக்காமல் இருக்குறதுக்கும் உரிமை எடுத்துக்கனும். அந்த உரிமை எனக்கு வேணாம்..”

தனக்கே உரிய ஏதோ ஒன்று கைவிட்டு போனதை அவனால் பொறுக்கவே முடியவில்லை. அவளின் கைகளை பிடித்துகொண்டு அப்படியே மண்டியிட்டான்.

“ப்ளீஸ்.. நான் நீ சொன்னதை புரிஞ்சுகிட்டேன். நீதான் வேணும்னு காத்திருக்கேன். உன் மனசுல நான் இல்லையா? உயிர் தேக்கி வைத்த குரலில் கேட்டான் அவன்.

“இல்லையே!” சலனமே இல்லாமல் சொன்னாள் அவள்.

“நிஜமாகவே இல்லை. உன்னை நீ மாத்திக்கிட்டா சொன்னதை கேட்க சந்தோஷமா இருக்கு. உன் அம்மாவும் மாறிட்டாங்கனு உணரமுடிஞ்சது. இனி உன்னை நம்பி வர பொண்ணு நிச்சயம் சந்தோசமா இருப்பா.. ஆனா அது நானாக இருப்பேன்னு நினைக்காத. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆக போகுது.”

“பொய்.. என் மேல இருக்குறகோபத்துல பேசுற நீ!”

“ச்ச..ச்ச..நான் என்ன குழந்தையா? என்னை எனக்காக நேசிக்கிற ஒருத்தர் இருக்கார். நான் அவரைத்தான் நேசிக்கிறேன்.”

“அப்போ நான் காத்திருந்தது?”

“ ஏன் எல்லாத்தையும் இமோஷனலா பார்க்குற?கொஞ்சம் ப்ரக்டிகலா இரேன்!” அன்று அவன் சொன்னதை இன்று அவள் கூறினாள். அதை அவனும் புரிந்து கொண்டான்.

“இல்ல நீ கோபத்துல சொல்லுற”என்று அவன் பிடிவாதமாக சொல்ல, அவளின் செல்போன் மிளிர்ந்தது.

அதில் வந்த அழைப்பை பார்த்தவள் ஃபோனை அவனிடம் உயர்த்தி காட்டினான்.

SOULMATE” என்று ஆங்கிலத்தில் பெயரும் அதன் கீழ் ஒரு ஆணின் முகமும் மிளிர்ந்தது.

“..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.