(Reading time: 18 - 35 minutes)

“இது பாரு, உன்னை நான் வெறுக்கவுமில்லை, கோபமாகவும் இல்லை. உன் அம்மாவை பாரு எவ்வளவு வேதனை படுறாங்க. என் பேரை சொல்லி ஒரு தாயின் கண்ணிருக்கு ஆளாகத.. அந்தபாவம் என்னை சேர வேணாம். நான் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்.அதுக்கு, என்னால யாரும் உடைஞ்சு போகாமல் இருக்கனும்.. புரிஞ்சுப்பனு நினைக்கிறேன்” என்றாள்.அவளையே இமைக்காமல் பார்த்தான் அவன்.அவள் தனது செல்ஃபோனை அழுத்தி பிடித்த விதமே அவளின் தீர்க்கமான முடிவை எடுத்து காட்டியது.

கேசத்தை அழுந்த கோதி பெருமூச்செரிந்தான் அவன்.

“ உடனே மாற முடியாது. ஆனா நீ சொன்னதுக்காக மனச மாத்திக்க முயற்சி பண்ணுறேன். எந்த பாவமும் உன்னை சேராது. உன் வாழ்க்கை சந்தோஷமா அமையும். ஆல்தி பெஸ்ட்” என்றவன் அவளை கடைசியாக ஒருமுறை விழிகளில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து மறைந்தான். அவன் கார் அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்தவள், விடாமல் அழைத்து கொண்டிருந்த ஃபோனை உயிர்ப்பித்தாள்.

“ஹாய் பா..”

“ஹேய் ஹாய்டா..பிசியா? தொந்தரவு பண்ணிட்டேனா?”

“ச்ச..ச்ச பீச்ல இருக்கேன்..”

“என்ன மனசு சரி இல்லையா?”

“ம்ம் லைட்டா..மீட் பண்ணலாமா?”

“இதென்ன கேள்வி உடனே வரேன்.. பட் என்னசுனு சொல்லேன்!”

“அவனைப் பார்த்தேன்!” என்றவள் நடந்த மொத்ததையும்மறைக்காமல் சொன்னாள்.

“நல்லவேளை நீங்க ஃபோன் பண்ணிங்க. அதான் அவனை சமாளிச்சுட்டேன்”

“அப்போ நீ அவன்கிட்ட சொன்ன மொத்தமும் பொய் அப்படிதானே? ஏன் நீ அவனை மிஸ் பண்ணலயா? அவன் கண்ணுல உண்மை இல்லையா?”

“நிறைய உண்மையை பார்த்தேன்.. வலியையும் பார்த்தேன்.. ஆனால் ஏதோ ஒரு நொடியில என்னால காதலை உணர முடியல. அது மட்டுமில்ல, நான் அவனை நிஜமாவே மன்னிச்சிட்டேனானு அவனும், அவன் உண்மையிலேயே என்னை நேசிக்கிறானானு நானும் வருங்காலத்தில் நினைக்க ஆரம்பிச்ச எல்லாமே தப்பாகிடும்.. அதுமட்டும் இல்லாம் தெரியலப்பா.. ஏதோ ஒன்னு என்னை தடுத்துருச்சு..” அவளது பதிலைக் கேட்டவனின் முகத்தில் பெரிதாய் புன்னகை மலர்ந்தது.

“லூசு,உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு புரியுது உனக்கு புரியலையா? நான் உனக்கு ஃபோன் பண்ணுறதுக்கு முன்னாடியே நீ என்னைப் பத்தி அவன்கிட்ட சொல்லி இருக்க. அப்படின்னா நீ சொன்ன விஷயம் உன் ஆழ்மனசுல இருக்குனு தானே அர்த்தம்?”

“நா.. நா..நான் உங்கள காதலிக்கிறேன்னு சொல்லுறீங்களா?”

“ம்ம் மேபீ யெஸ்..மேபீ நோ.. காதல் வந்திருக்காது. பட் ஏதோ ஒரு நொடியில் நீ எதிர்ப்பார்த்த அன்பு என்கிட்ட தான் இருக்குனு நீ உணர்ந்திருக்கலாம்.மனசில் இல்லாதது வார்த்தையாக வராது அம்மணி..”

“ஹான்…?? இப்போ நான் என்ன பண்ணுறது?”

“என்னையும் என் குடும்பத்தையும் உனக்கு நல்லாவே தெரியும். அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அம்மாவோட பையனுக்கும் உன்னை மட்டும்தான் பிடிக்கும். சோ பெரியமனசு பண்ணி யோசிச்சு பாரு. உனக்கு பதினைஞ்சு நிமிஷம் டைம் தரேன்.. க்ரீன் சிக்னல்னா ஒரு மிஸ்ட் கால் கொடு ஓடி வரேன்”என்று சிரித்தபடி ஃபோனை அவன் வைக்க, அவள் என்னவென்று சொல்ல முடியாத தவிப்புடன் ஃபோனையே வெறித்தாள். தூரத்தில் ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள் அவள். கண்களில் காதலுடன் தன்னருகில் நின்றிருந்தவனின் தோளில் அந்த புதியவள் சாய்ந்து கொண்டாள்.

மிஸ்ட் கால் வருமா வராதா? அது உங்கள் கற்பனைக்கு..ஹீ ஹீ.. நம்ம கதாநாயகிக்கும் இரண்டு கதாநாயகர்களுக்கும் என்ன பேரு வைக்கலாம்னு சொல்லுங்க மக்களே.. உங்க பதிலுக்காக ஆவலாக வெயிட் பண்ணுறேன்.நம்ம ஹீரோயின் பார்த்த அந்த இருவர்தான் அடுத்த அத்தியாயத்தின் ஹீரோ ஹீரோயின்

முன்னாடியே சொன்ன மாதிரி, இதற்குமுன்னால் வந்த கதைக்கு வந்த கமெண்ட்ஸ்கு பதில் கொடுத்திடுறேன்.

Suveni,Anubharathy,Madhumathi9, Dharani : Thank you so much. Unga kutty kutty comments enakku neraya energy tharugirathu. Thanks Again.

Tamilthendral – Super ma. Arjun- Subi..But namma VVNP charactersna, Ajju thathaava irunthaalum athiradiyaa doctor aiye mirattiduvaarla .. haa haa thanks ma..

Aboorva – Very strong name. Admins kodutha pick u apt name. Semma ma..Thank you.

Vasumathi- Wow.. very strong name again. Apt aa irkkum..Poonakuuttya? irunga ungaLai thaniya gavanikkiren.

Sahithya- Baby, firstu unga name eh enakku romba pidicha name. Thanks for your beautiful comment. Ivanga naan hospital la paartha real couple than. Intha third episode um Real couple inspired than. Padichittu sollunga.

Okay friends, adutha episode la pesuvom :)

என்னவளும், என்னவனும் - 02

{kunena_discuss:785}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.