(Reading time: 20 - 40 minutes)

"வர்ஷா இவுங்கதான் சாரோட முறைப்பொண்ணு சரிதா.நா உன்னோட விஷயமா இவுங்களைப் பார்த்து பேசத்தான் பெங்களூர் போயிருந்தேன். நல்லவேளை இவுங்களும் சாரை பெரியவுங்க சொன்னதால தான் கட்டிக்கணும்னு இருந்தாங்க போல , நா போயி சொன்னதுமே, தானே அம்மா கிட்டே சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறதா ஒத்துக்கிட்டாங்க. இப்போ அம்மா கிட்டே  பேசிட்டுதான் உங்களை பாக்க வந்தோம் , கூடிய சீக்கிரமே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க அம்மாவும் சம்மதிச்சுட்டாங்க. இப்போ சந்தோஷம்தானே" என்றாள் நறுமுகை.

"வேணாம் நறு , சார் இவுங்களைத்தான் விரும்பறதா என்கிட்டே சொன்னார்..அவர் ஆசைப்பட்ட மாதிரியே வாழட்டும்.,நா குறுக்கே நிக்கலை .." என்றாள் வர்ஷிதா.

நறுமுகை குறுக்கிட்டு "அச்சோ வர்ஷா நீ இப்படி  ட்யூப் லைட்டா இருக்கியே ..சார் உன்னை தான் லவ் பண்ரார் , இது தெரியாமையா நா பெங்களூர் போயி வீரதீர சாகசம் பண்ணி சரிதாக்காவையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன் " என்றாள்.

வர்ஷிதாவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. நிமிர்ந்து முகிலனை பார்த்தவள் முதல்  முறையாக அவன் தன்னை  காதலாய் பார்க்க நாணத்தில் தலை குனிந்தாள்.

அவளை வியப்புடன் பார்த்தபடி "என்ன முகில் , நீ இன்னும் இவுங்ககிட்டே லவ்வ சொல்லலியா...வெரிகுட் ..என் அத்தை மகன் ரொம்ப பாஸ்ட் தான் , நல்ல வேளை நா தப்பிச்சேன் " என்றாள் சரிதா.

“எல்லாம் உனக்காக தாண்டீ மண்டூ ..எங்கே நீ வந்து நானும்தான் உன்னை லவ் பன்றேன்னு சொல்லிட்டா என்னாவது " என்றான் உரிமையுடன்

"உன் மூஞ்சியைப் போயி லவ் பண்றதா யாராவது ..அதுவும் நா சொல்ல முடியுமா? நெவர்... அந்தளவுக்கு என் ரசனை மோசமா இல்லைப்பா " என்றாள் அவள் கேலியாக.

பிறகு “சாரி முகில்..ஒருவேளை என் மனசு காலியாக இருந்தால் உன்னைப் போல ஒரு பேரழகனை விட்டுக் கொடுக்க மனசு வருமோ என்னவோ...இப்போ என் மனசில் வேறு ஒருத்தர் குடியேறிட்டார்...என் ப்ரொபெஸர்தான் அவர். நானும் உன்னைப் போலவேதான் அவரிடம் லவ்வை சொல்லலை ..இனிமேல் தான் சொல்லணும்..அப்போ நீதான் என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணனும் ..” என்றாள் சரிதா.

"நிச்சயமாய்...நானும் என் தங்கச்சி நறுமுகையும் உனக்கு உதவி பண்ணுவோம் ..இது என் காதல் மேல் ஆணை " என்றான் வர்ஷிதாவைப் பார்த்தபடி.

நறுமுகை கண்சிமிட்டியபடி "சரிதாக்கா ...நம்ம கேன்டீன்ல டீ ரொம்ப நல்லாருக்கும் ..வாங்களேன் போய் குடிச்சுட்டு நிதானமா வரலாம்" என்றாள்.  

" சரிதா..,நறு...உங்க ரெண்டு பேருக்குமே எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியலைம்மா  , என் உயிரையே எனக்கு திருப்பிக் கொடுத்திருக்கீங்க. " என்றான் மகிழ்ச்சியுடன்.  

“அதுக்காக வெறும் நன்றி மட்டும் போதாது , உங்களுக்கு பொறக்கப்போற நாலு பெண் குழந்தைகளில் ரெண்டு பேருக்காவது  எங்களோட பேரை வைக்கணுமாக்கும்....”என்று நீட்டி முழக்கியபடி அவர்கள் வெளியேறியபின்  

நம்பமுடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷிதாவை நோக்கி கை நீட்டினான் அவன். ஓடிவந்து அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்த அவள் "என்னை ஏன் இப்படி தவிக்க விட்டீங்க எங்கப்பா மட்டும் உயிரோட இல்லைன்னா நா இந்நேரம் விஷம் குடிச்சு செத்திருப்பேன் ..நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால நெனைச்சு பாக்கவே முடியாது .. .ஐ லவ் யூ” என்றாள் விசும்பலுடன்.

அவள் தலையை மென்மையாக வருடியவாறே “ஐ டூ லவ் யூ வர்ஷு.உன்னால புரிஞ்சுக்க முடியலையா. நான் நெனைச்சிருந்தா உன்னை எப்பவோ மும்பை ஆபீசுக்கு மாத்தியிருக்க முடியும். உன்னை ஒரேயடியாக பிரிய மனமில்லாமல்தான் பக்கத்துக்கு செக்ஷனுக்கு மாத்தினேன். உன்னைப் பாக்காமல் என்னாலும் இருக்கமுடியாது தெரியுமா , இந்த ஆறு மாதங்களாக நானும் லீவ் எடுக்கவே இல்லை”என்றான் . “ஓ உண்மையாவா? அது என்னைப் பார்க்கத்தானா? நா நம்ம சார் வேலைல ரொம்ப சின்சியர் ன்னு நெனச்சேன் " என்றாள் சிரித்தபடி.

“வர்ஷு,என் ஒவ்வொரு அசைவையுமே ரசிக்கும் ரசிகை நீ. உனக்கு என்னை முழுசாய்           கொடுக்கத்தான் எனக்கு ஆசை, ஆனால் சரிதாவோட மனநிலை தெரியாததாலதான் கொஞ்சம் தயங்க வேண்டியிருந்தது .ஒருவேளை நம் காதல் நிறைவேறாவிட்டால் நீ தாங்கமாட்டாய் என்றுதான் நான் உன்னை வெறுப்பது போல நடித்தேன். இப்போ நீ கிளம்பி போயிருந்தால் கூட எப்படியாவது சரிதா கிட்டே பேசிட்டு எங்கம்மா கிட்டே சம்மதம் வாங்கி உன்னை தேடி வந்திருப்பேன் , நீ இல்லாத வாழ்க்கையை என்னாலயும் நெனைச்சு பாக்க முடியாதுடா செல்லம்  ..” என்றவன் சற்று நேரம் மௌனித்துவிட்டு

“இப்போ  எல்லாப் பிரச்சனையும் தீர்ந்தது. நீ உங்க வீட்டுலயும் சொல்லி சீக்கிரமே நம்ம கல்யாணத்துக்கு அனுமதி வாங்கிடு . நமக்கு நிறைய வேலை இருக்கு. சீக்கிரமே  கல்யாணம் முடிச்சு நம்ம ரெண்டு  குழந்தைகளுக்கு அவுங்க ரெண்டு பேர் பேரையும் வைக்கணும் , நன்றிக் கடனாச்சே..”என்றான் புன்னகையுடன். அவள் முகம் ரோஜாவாக சிவந்தது.

{kunena_discuss:785}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.