(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - தப்பிப்பாளா??? - சிவரஞ்சனி

midnight

து ஊரை விட்டு தள்ளி உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் .

நேரம் நள்ளிரவு 12:30.

அக்ஷயா.23 வயசு பொண்ணு.

அவ இப்போ அந்த அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் போனை பாத்துகிட்டே தப்பிச்சா போதும்னு தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருந்தா.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அவளுக்கு அவ்ளோ சந்தோசத்தை கொடுத்த அதே போன் அவளுக்கு வில்லனா மாறி மானத்தை வாங்கப் போறது தெரியாம,அதை பத்திரமா தூக்கிட்டு ஓடிட்டு இருந்தா.

அவளை ஒரு கும்பல் தீவிரமா துரத்திட்டு போச்சு.

அப்போ எதிர்ல வந்த அந்த அப்பார்ட்மெண்ட் செக்கூரிட்டியை பார்த்து கெஞ்சினா, பதட்டத்தோட திரும்பி திரும்பி பார்த்துட்டே .

"அண்ணா அண்ணா ப்ளீஸ் ,ஹெல்ப் பண்ணுங்க"

அவன் சிரிச்சதை பார்த்தப்பறம் தான் அவனும் அந்த கும்பலுக்கு உடந்தைனு தெரிஞ்சுது .

திரும்பவும் ஓடினா.எப்படியாச்சும் இன்னும் ஒன் ஹவர் ஓட்டினா போதும்.அவர் வந்திருவார் .அதுவரை இவங்ககிட்ட இருந்து எப்படியாச்சும் தப்பிக்கணும்னு அன்டர்கிரௌண்ட் ல இருந்த கார் ஸ்டாண்ட்க்கு போய்,அங்க இருந்த ஒரு கார் மறைவுல ஒளிஞ்சுக்கிட்டா.

அவர் வரட்டும்,உங்களை பீஸ் பீசா கிழிச்சிருவார்னு மைண்ட் வாய்ஸ் போட்டா.ஆனா ,பாவம் அதுக்கு முன்னாடி நடக்கப்போறது அவளுக்கு என்ன தெரியும்.

அந்த கும்பல் அங்கேயும் வந்திருச்சு .அதுல ஒருத்தன் சொன்னான்.

" டேய்ய் அவ இந்த பக்கம் தான் டா வந்தா.அவளை விடக்கூடாது. என்னா திமிரா பேசினா.அவளுக்கு சரியான பாடம் கத்துகுடுக்கணும் ."

" இதைக்கேட்ட அவ வாய்பொத்தி மூச்சை பிடிச்சிட்டு உட்கார்ந்திருந்தா"

அந்த நேரம் பார்த்து அவ போன் அலறுச்சு !!!!

அவ்ளோதான்.அந்த கும்பல் அவளை சுத்தி வளைச்சிடுச்சு .நையாண்டிச்சிரிப்போட அவளை நெருங்கினாங்க .

அவங்க கைல இருந்ததை பார்த்து பயந்துட்டே ,ப்ளீஸ் வேணாம் ,விட்ருங்க னு கெஞ்சினா.

ஆனா அவங்க விடலை .

அவ மூஞ்சில புல்லா கேக் பூசி ,சாக்லேட் சிரப் வச்சு bafoon ￰வேஷம் போட்டு கொம்பு வச்சு போட்டோ எடுத்து அவ பிரண்ட்ஸ்க்கெல்லாம் அனுப்பிட்டாங்க அவளோட பாசமிகு அண்ணண்,தம்பி ,அக்கா,தங்கை கசின்ஸ் & செல்ல அண்ணா.

இன்னைக்கு அவளோட பிறந்தநாள் .கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தான் அந்த கொண்டாட்டம் முடிஞ்சுது .

இவ பயங்கர அப்பா செல்லம் .அவர் இருக்கும் தைரியத்துல ,என் மூஞ்சில லாம் ஒரு பின்ச் கேக் கூட பூச முடியாதுனு பந்தாவா சவால் விட்டா.

இந்த முறை அவ அப்பா வெளியூர் போயிருந்தார்.இன்னும் ஒரு மணி நேரத்துல வரப்போறார்.அவர் வந்துட்டா யாரும் ஒன்னும் செய்ய முடியாதுனு நெனச்சா,அதுக்குள்ளே மாட்டிக்கிச்சு பாவம் .

அப்பறம் அவ அப்பா வரதுக்குள்ள அவங்களே கிளீன் பண்ணி விட்டுட்டாங்க .ஆனாலும் கமுக்கமா சிரிச்சு கிட்டே டோஸ் வாங்கினாங்க எல்லாரும் .

காலைல இருந்து மணிக்கொரு கிப்ட் குடுத்து சந்தோஷத்துல மூழ்கடிச்சு அசத்திட்டாங்க ....

நம்மளும் அவளுக்கு வாழ்த்து சொல்லி விடைபெறுவோம் !!!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.