(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா

kid

ன்று காலையில் மிக வேகமாக காலை மற்றும் மதிய சமையலை முடித்து, அடுப்பு மேடையை துடைத்து, பாத்திரங்களை கழுவ போட்டுவிட்டு, தன் இரண்டு பிள்ளைகளுக்கு ஊட்டி , தானும் உண்டு, கிளம்பி, அடுத்த வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு தன் இரண்டாவது மகன் கௌசிக்கை டேகேரில் விட்டுவிட்டு, மூத்த மகன் தருனை கையில் பிடித்து கொண்டு அவன் படிக்கும் பள்ளிக்கு ஓட்டமும் நடையுமாக சென்றால் புனிதா. 

இன்று பள்ளியில் ptm , வழக்கமாக வருடம் இருமுறை வரும் அழைப்புதான், இம்முறை தன் கணவன் உடன் இல்லாதது மிக அலைச்சல்....  இருந்திருந்தால் நடக்க தேவையில்லை, வண்டியில் வந்திருக்கலாம்,கணவன் வெளிநாட்டுக்கு சென்று 6 மாதங்களாகிது. தருன் ஒன்றாம் வகுப்பு, கடந்த மூன்று வருடங்களாக அதே பள்ளியில்தான் படிக்கிறான். மிகவும் புத்திசாலி, ஆங்கில தின நாளிதழ்களையே சரளமாக வாசிப்பான். அதில் புனிதாவுக்கு பெருமையை....

இன்று பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தாள் புனிதா. தருனுடன் பள்ளி வரவேற்பறையில் அமர்ந்து 

காத்துக் கொண்டிருந்தாள், சிறிது நேரத்தில் புனிதாவை மட்டும் தருனின் வகுப்பு ஆசிரியை அமிர்தா உள்ளே அழைத்துச்செல்ல தருன் மட்டும் அங்கு இருந்த புத்தகத்தில் ஐக்கியமானான். 

சிறிது நேரம் தருனின் படிப்பை பற்றி பேசியவர், பின்பு அமிர்தா சொன்னதை கேட்க கேட்க தலை சுற்றியது. அவர் கூரியதின் விவரம் -  படிப்பில் 10 வயதுடையவன் போல திறன் கொண்ட தருன் பேச்சிலும் பழக்கவழக்கங்களில் 3 வயதை  தான்டவில்லை என்பதே... தருனை மருத்துவரிடம் அழைத்து செல்ல ஆலோசனை தந்தார். சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்ததும் தருனை அடித்து விட்டு அழுதாள். என் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சினை என்று ஏற்று கொள்ள முடியவில்லை. பின் கணவனை அழைத்து விவரம் சொன்னாள். 

முதலில் குழந்தை நல நிபுணரிடம் சென்று பள்ளியில் நடந்த ஒவ்வொன்றையும் விளக்கினாள், அவர் paediatric psychiatrist பற்றி கூறி அவரிடம் செல்ல சொன்னார், இதற்கிடையில் பள்ளி முதல்வர் அழைத்து தருன் சரியாவதற்கு பள்ளியில் ஒரு சில சலுகைகள் தந்தனர், உதாரணமாக அவனுக்கு music therapy மற்றும் நூலக புத்தகங்களை தருவார்கள். 

Paediatric psychiatrist ராம் அவர்கள் ஒரு சில பயிர்ச்சியை வீட்டில் செய்ய சொன்னார். 

ரு மாதம் கழித்து..,

இன்று வரை ஒரு மாற்றமும் வரவில்லை.., பின் திரும்பவும் பள்ளியில் புகார்.., ஆட்டோவும் நடையுமாக அழைச்சல் எல்லாம் சேர்ந்து கணவன் காதை பதம் பார்த்தது., கணவன் விக்ரமுக்கு புனிதாவின் நிலை தெளிவாக புரிந்தது. உடனே கிளம்பி வர இயலாத சூழல். 

இப்போது டாக்டர் ராம் சொல்லியபடி ஒரு தெரபி சென்டருக்கு அழைத்து சென்றாள்., அங்கே ஒரு சில சோதனைகள் நடத்தப்பட்ட பின் அறிக்கை தந்தனர், அதில் தருனுக்கு கண் தொடர்பேயில்லை என்றும் behavioural issues போன்ற பிரச்சினைகளை பட்டியலிட்டனர். அவர்கள் கேட்ட முதல் கேள்வி ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் டிவி, phone, tab, போன்றவைகள் தருன் எவ்வளவு நாட்களாக காட்டப்பட்டது என்று. தருனுக்கு 1 வயது முதலே பரிட்சயமே.., கௌசிக்கை கவனித்து கொள்ளும்போதோ அல்லது விருந்தினரை கவனிப்பதற்காகவோ, மொத்தத்தில் ஒரு baby sitter ஆக பயன்படுத்தபட்டது. புனிதா இது எவ்வளவு பெரிய பிரச்சினை என்று தெரியாமல் “இப்பொழுதெல்லாம் ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் டீவி பார்பான்” என்றாள். விசம் மூடியில் குடித்தால் என்ன கின்னத்தில் குடித்தால் என்ன விசம் விசமதான் என்றார் அந்த Therapist. ஒரு வயது முதலே குழந்தைகள் எங்கே எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை கவணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள், நாம் வருபவர்களிடம் freeயா பேசவும் hotelலில் தொல்லையில்லாமல் சாப்பிடவும் போனை கையில் கொடுத்து அமர்த்தியதால் ஏற்படுவதே... 

தினமும் ஓரு மணி நேரம் occupational therapy என்றார்கள், ஒரு நாள் fees 400ரூபாய், ஆட்டோ 300ரூபாய். மாதம் 20 ஆயிரம் அதிகமாக தேவைப் பட்டது. தருன் மற்றும் கௌசிக்கை ஏதாவது ஓர் பயிற்சியில் ஈடுபட நினைத்து skating அனுப்பினாள். Therapist அறிவுரைப்படி வீட்டிலும் beam walk, banana bath, finger compression போன்றவை தினமும் செய்தாள். தினமும் விக்ரமின் message தான் மனதுக்கு இதம் அளிக்கும். 

3 மாதம் ஆனது, பள்ளியில் நல்ல முன்னேற்றம், புனிதாவும் நிறையவே மாறியிருந்தாள், இந்த மூன்று மாதமுமே scooterஇல் தான் செல்கிறாள், கணவனின் scooter ஐ தோழியிடம் கற்றுக்கொண்டாலள்., principal கூட தருனின் முன்னேற்றத்தை பற்றி ஒரு case study செய்ய சொன்னார்கள்.. தருன் பள்ளியில் அனைவரையும் போல் படித்து வரவேண்டும் என்பதே புனிதாவின் பிராத்தனை நாமும் அதையே பிராத்திப்போம்.

my first story in chillzee, this is a true story of my friend, we became blind when it comes to our kids if someone pointing out only we realise it, even if we understand it’s hard to accept. pls avoid phone and other gadgets to your kids, spend time with your kids, take your kids to granny places, relative,s house or friend’s house along with you. Have fun, ”dedicated to all the hardworking mothers of special kids. Hats off

Pls tolerate my spelling mistakes

Thanks 

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.