(Reading time: 6 - 12 minutes)

”சரி,நாளை எனக்கு கணக்குப் பரீட்சை.அது ரொம்பவும் கஷ்டமானது.எனக்கு படிக்க இஷ்டம் இல்லை.அப்படியே படித்தாலும் எனக்கு எதுவும் ஏறாது.அதனால் நீ எனக்கு இந்த உதவியை செய்தே ஆக வேண்டும்.எப்படியாவது இந்த பரீட்சையில் நான் பாஸ் செய்து விட நீதான் எனக்கு உதவ வேண்டும்.உன்னால் முடியுமா?”

“நிச்சயம் எஜமான்.என்னால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் பாஸ் செய்வதற்கு நான் பொறுப்பு”

அக்பருக்கு இதை நம்புவதா வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது.

“உன்னை நான் எப்படி நம்புவது” என ஹுஸைனிடம் கேட்டான்.

அதற்கு ஹுஸைன்,ஏதோ சில மந்திரங்களைக் கூறி ஒரு விளக்கை வரவழைத்தான்.அதை அக்பரின் கையில் கொடுத்து “நீங்கள் நினைத்தது நடக்கவில்லையெனில் என்னை இந்த விளக்கிற்குள்ளே அடைத்து விடுங்கள். நான் விடுதலை அடைவதற்காக பல வருடங்களாய்க் காத்துக்கொண்டிருந்தேன்.என் விடுதலையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.நீங்கள் கேட்டது நிச்சயம் நடக்கும்.கவலை கொள்ளாதீர்கள்”.

அக்பர் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்தான்.இப்பொழுது கணக்குப் புத்தகத்தைப் பார்த்து அவனுக்கு பயத்திற்கு பதில் சிரிப்புதான் வந்தது.அந்த குஷியில் புத்தகத்தை தூக்கி எறிந்து விட்டு நடனம் ஆடத் துவங்கினான்.அவனுக்கு இனி கணக்குப் பரீட்சைக்குப் படிக்க வேண்டியதில்லை என நினைக்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.அவன் ஆடிய ஆட்டத்தில் எங்கிருந்தோ விழுவது போல் இருந்தது.அருவி போல் தண்ணீர் கொட்டியது.அக்பர் குதூகலத்துடன்,

”ஹுஸைன் உன்னை நான் பரீட்சைக்கு மட்டும்தான் உதவ சொன்னேன்.ஆனால் நீ என்னை எதோ அருவிக்கெல்லாம் அழைத்து வந்து சந்தோஷப்படுத்துகிறாய்.மகிழ்ச்சி” எனக் கூறி முகத்தை துடைத்துக்கொண்டு கண் விழித்துப் பார்க்கையில் கையில் கப்புடன் முஹம்மது நிற்பதைப் பார்த்ததும் அக்பருக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“புத்தகத்தைத் திறந்தவுடன் எப்பவும் போல் இன்றும் தூங்கி விட்டாயா.எழுந்து பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பு.நேரம் ஆகி விட்டது” என முஹம்மது கூற பையன் சற்று பதறித்தான் போனான்.

“தன் கையே தனக்கு உதவி என்பதை இன்றுதான் நான் உணர்ந்துக் கொண்டேன்“ எனத் தலையில் அடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பிப் போனான் தன் சொந்த முயற்சியில் கணக்குப் பரீட்சை எழுதும் எண்ணத்துடன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.