பிறகு, தாம்பூலத் தட்டுக்கு முன், மூவரும் அமர்ந்தனர். வேறுயாரும் அருகிலில்லை!
"முத்துசாமி சார்! என்னோட தர்ம சங்கடத்தை புரிஞ்சிக்கக்கூடிய ஒரே நபர், நீங்கதான்! என் பிள்ளை ஊரெல்லாம், 'நான் எங்கப்பா, அம்மாவுக்கு பங்களா கட்டித்தந்திருக்கேன், கார் வாங்கித்தரப்போறேன், அப்படியெல்லாம் பீற்றிண்டு அலையறான், உங்ககிட்டகூட சொல்லியிருப்பானே, அவனுக்கு உங்ககிட்ட விசேஷ மரியாதை உண்டு, ஏன்னா, பள்ளிக்கூடம், காலேஜ் படிக்கிறபோது, நீங்க ஒவ்வொரு தேர்வின்போதும் உங்க மகனோட சேர்ந்து இவனையும் ஆசிர்வாதம் பண்ணுவீங்களாம், கடைசிவரை உங்க பிள்ளைக்கு, அடுத்தபடியா அவனும் நல்ல மார்க் வாங்கினதுக்கு, உங்க ஆசிர்வாதம்தான் காரணம்னு நம்பறான். அதனால்தான் உங்களை 'பெரியப்பா'ன்னு ஆசையா அழைக்கிறான். அது நல்லதுதான், பெரியவங்களை மதிப்பது ஒழுக்கமான குணம், அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மனைவியிடமும் அப்படியே! அவன் அமெரிக்காவுக்கு கிளம்பறபோது, எங்கிட்ட மட்டும், ரகசியமா சொன்னான், உங்ககிட்ட எந்த சூழ்நிலையிலும் சொல்லவேண்டாம்னு சத்தியம் கேட்டு வாங்கிண்டிருக்கான்......"
"அப்படியா? என்ன? என்ன?"
முத்துசாமி, சாவித்திரி இருவரும் நெருங்கி வந்து காதை தீட்டிக்கொண்டனர்.