(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா

love

னக்கு உங்கள் மீது காதல் இல்லை”

“இடியென இரங்குதடி வார்த்தைகள்.

உன் கண்வீச்சின் கவிதைகள் பொய்யா?

உன் வாய்மொழியின் வாய்மை பொய்யா?”

“கண்வீச்சும் வாய்ப்பேச்சும் காதல் சொல்லாது.

அது உங்கள் மனத்தின் மாயை”

“இருக்க முடியாது கண்மணி

ஏனென்று சொல்கிறேன் கேள்…..

விபத்தில் துடித்த நாய்குட்டிக்கு நீ காட்டியது கருணை

விபத்தில் வீழ்ந்த எனக்காக துடிதடித்தது உன் காதல்

பேருந்து நெரிசலில் உரசிய கூடுகளுக்காக உன் கண் சிவந்ததும் பின் அவர் கன்ன்ம் சிவந்ததும் உன் வீரம்

என் கைக்குலுக்கலுக்கும் என் தோள் உரசலுக்கும் மின்சாரம் பாய்ந்து உன் கன்னம் சிவந்தது காதல்

நண்பர்களோடு களித்துவிட்டு விடைபெரும் நேரம் ‘பிறகு பார்க்கலாம் ‘எனும்போது உன் இதழில் புன்னகை அது நட்பு

பல மணி ஒன்றாய் இருந்தாலும் பிரியும் நேரம் ‘நாளை பார்க்கலாம் ‘எனும்போது உன் கண்கள் பனிக்கும் அது காதல்

பசி பொறுக்கமாட்டாத உன் நண்பணுக்கு நீ உணவ பறிமாறியது உன் தாய்மை

பசி வரக்கூடாதென உணவை எனக்கு ஊட்டிவிட்டது உன் காதல்

தோழிமாருடன் பேசி ப்பேசி ஓய்ந்தபின் அமைதி தேடுவாய் அது உன் தனிமைத்தேடல்

என் கைக்கோர்த்து பலமணி அமைதியாய் அமர்ந்துவிட்டு நிறைவாய் சிரிப்பாய் அது காதல்

நண்பர்கள் பலரின் சுகதுக்கம் சுமப்பாய் அது உன் பொறுமை

தோழிகள் பலர் இருந்தாலும் என்னைத்தேடி வந்து உன் சுகதுக்கம் முதலில் பகிர்வாய் அது காதல்

பிறரிடம் சண்டைகள் மூண்டால் முதலில் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்வாய் அது உன் மேன்மை

என்னோடு மட்டும் ஊடல் கொண்டால் மன்டியிட்டு மன்னிப்பு கேட்க வைப்பாய் அது காதல்

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உனக்கு உற்ற தோழர்களுக்குகூட கைகுலுக்க கூச்சப்படுவாய் அது உன் பெண்மை

ஆசையாய் என் கைக்குலுக்காமல் ஒரு நாளும் நீ பிரிந்ததில்லை அது காதல்

இன்னும் எத்தனையோ!!மறுக்க முடியுமா உன்னால்?!”

“இதெல்லாம் உங்கள் கற்பனையே.எனக்கு உங்கள் மீது காதல் இல்லை”

“காதல் இல்லையென்றால் இப்போது கண்கள் பனிப்பானேன்

நம் காதல் நீ ஏற்க எது தடை?

அண்ணன் மிரட்டலா?அப்பா சோகமா?அம்மா அழுகையா?

சாதிபேதமா?பொருளாதார பேதமா?என் மீது நம்பிக்கை இன்மையா?”

“இதெல்லாம் இல்லை.எனக்கு உங்கள் மீது காதல் இல்லை”

“கண்மணி உனக்கும் எனக்குமான தனிமைநிமிடம் ஒரு பத்துநிமிடம் கொடு.உன்னுள் உறைந்த காதலை உருக்குகிறேன்.”

“இது வேண்டாத யுக்தி. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை”

பத்துநிமிடம் மட்டுமே என் விரல் தீண்டல் கூட இல்லாமல் உன் காதலை மலரச்செய்கிறேன்”

“எத்தனை நிமிடம் ஆனாலும் இல்லாத காதல் மலராது”

“அத்தனை ஆணவமா?அப்போது பந்தயமா?பத்துநிமிடம் அசைவற்று நிற்க வேண்டும்”

“!!!!”

“பயமா?”

“பயமா?எனக்கில்லை நான் தயார்”

அந்த பந்தயத்தின் ஒவ்வொரு நிமிடமும்அவன் அருகாமையே அவளை என்னவோ செய்தது.

அமைதியாய் தான் அமர்ந்திருந்தான் ஆனால் அவள் கண்ணில் அவனைத்தேடினான்.அவள் மனம் அமைத் இழந்தது.

சற்று பக்கம் நெருங்கினான்.அவளை பார்வையிலேயே புசித்தான்.அவள் இதயம் வியர்த்தது.

ஆடைகள் மட்டும் உரசும் தூரத்தில் வந்தான்.அவள் இதயம் இரைந்தது.

மெல்லிய குரலில் ‘கண்மணி’என்றான்.அவள் உடலும் வியர்த்தது.

தன் வாய்குவித்து ஊதினான்.அவள் கண்மூடி சுவாசித்துக்கொண்டாள்.

அவள் கண்திறந்த போது அவன் பின்னாலிருந்து அவள் காதில் மூச்சுக்காற்றால் முனுமுனுத்தான் அவள் இதயம் பல நூறாய் தடித்தது.

அவள் பின்னல்ஜடையில் ஒளிந்திருந்த கழத்திடம் காதல் சொன்னான்.’கண்மணி நான் உன்னை காதலிக்கிறேன்’.அவள் உடலும் துடித்தது.

சற்று நகர்ந்து இன்னொரு காதில் இரகசியம் பேசினான்’கண்மணி என்னவள் நீ’.அவள் வயிற்றில் ஏதோ உருண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.