Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

" அண்ணாச்சி! ஒருத்திக்காக, ஒன்பதுபேர் சாகமுடியுமா, நியாயமா? நான் சொல்றதை புரிஞ்சிகிட்டு முடிவெடுங்க!"

" அடப் பாவிங்களா!" என்று குரல் கொடுத்துக்கொண்டே, உள்ளே வந்தார், மூத்தவரைவிட வயது அதிகமான அத்தை!

" ஏன்டா உங்களெல்லாம் பத்துமாசம் வயத்திலே சுமந்து உசிரை பணயம் வைச்சு பெத்துப்போடற பொம்பளைக்குத் தான்டா தெரியும், உசிரோட அருமை! என்னவோ எடுத்தேன், கவிழ்த்தேன்னு யாரை சாகடிக்கிறதுன்னு சீட்டுக்குலுக்கிப் போடறீங்க, இப்ப அப்படி என்னடா ஆயிடுச்சி?"

" இன்னும் என்ன ஆவணும், அத்தை! இந்த வருஷம் பரிவட்டம் நமக்கில்லேன்னு முடிவெடுத்தாச்சாம், ஊரிலே நாம இனிமே எப்படி தலை நிமிர்ந்து வாழறது?"

" அண்ணாச்சி! இந்த விஷயத்திலே ஒரு முடிவு வரவரையிலும், நான் கடையை திறக்கப்போறதில்லே....."

" நானும்தான்........."

" என்னை ஏன்டா தனியா விடறீங்க, என்னையும் சேர்த்துக்குங்கடா!"

" வீட்டில இருக்கிற பொம்பளைங்களோட உட்கார்ந்து முக்காடு போட்டுக்கிட்டு மூக்கை சிந்துங்க, போங்க! வெட்கங்கெட்ட பசங்க!"

" அத்தை! நீங்க என்ன சொல்றீங்க?"

" சுரைக்காய்க்கு உப்பில்லேன்னு......ஏன்டா! நீங்க யோசிக்கவே மாட்டீங்களா? இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க!"

 மூவரும் அத்தை என்ன பெரிசா கேட்டுடப்போறாங்கன்னு அலட்சியமாக அவளைப் பார்த்து சிரித்தனர்.

 " ஏன்டா! மானம், மரியாதை போயிடுச்சுங்கிறீங்களே, அது எப்போ, எப்படி, எங்கே, யாராலே போச்சு? நிஜமாவே போயிடுச்சா அல்லது நீங்களா நினைச்சுக்கிறீங்களா?"

 " அத்தை! பரிவட்டம் நமக்கு இல்லைன்னு எப்ப முடிவெடுத்தாங்களோ, அப்பவே பூடிச்சி!"

 " ஆக, ஒரு சின்ன ஜரிகை போட்ட முண்டாசிலே இத்தனை நாளா, ஒட்டிக்கிட்டிருந்த உங்க மானம், மரியாதை, இப்ப போயிடிச்சி, அப்படித்தானே?......."

 " அத்தை! நீயே இப்படி பேசலாமா? உங்கப்பா, எங்கப்பா காலத்திலிருந்து வர பழக்கம் விட்டுப்போகலாமா?"

 " அதுமட்டும்தான் விட்டுப்போக்க்கூடாத பழக்கமா? அவங்க ஒரு ஈ, எறும்பு, கொசுவுக்குக்கூட தீங்கு நினைக்கமாட்டாங்க, அந்தப் பழக்கத்தை காற்றிலே பறக்கவிடத் துடிக்கிறீங்களே, அதுவும், ஒரு உயிர் கொலையா, அல்லது பத்துபேர் தற்கொலையான்னு பூவா, தலையா போடறீங்க........."

 மூவரும் தலை குனிந்து வாயடைத்துப் போயினர்.

 " அது போகட்டும், வேலைக்காரன் சொன்னான்னு என்ன, ஏதுன்னு விசாரிக்காமலே, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறீங்களே, அவன் சொன்னது தப்பாயிருந்தால்.......?"

 மூவரும் அதைப்பற்றி யோசிக்காத காரணத்தால், வெட்கித் தலை குனிந்தனர்.

 " உணர்ச்சிவசப்படக் கூடாதுடா! தெளிவா ஆராய்ந்து முடிவெடுக்கணும். நான் தீர விசாரிச்சு வந்திருக்கிறேன், கேளுங்க! கோவில் விழா கமிட்டியிலே, மொத்தமே நாலு பேர்! அதிலே, நம்ம பங்காளி ஒருத்தர், கோவில் டிரஸ்டி இன்னொருத்தர், மீதி ரெண்டுபேர் கோவில் சிலைகளை திருடி அயல்நாட்டிலே விக்கிற அயோக்கியனுங்க! என்ன நடந்ததுன்னு சொல்றேன், கேளுங்க! 

 அந்த ரெண்டு சிலைதிருடிங்க வெளிநாடு போயிருக்காங்க, நம்ம பங்காளியும் அவர் தொழில்பார்ட்னர் கோவில் டிரஸ்டியும் எடுத்த முடிவு!

 இதுவரையில் அந்த முடிவு வெளியிலே யாருக்கும் சொல்லலே, ஏன்னா, ஊர்ஜனங்க அந்த முடிவை ஏத்துப்பாங்களோ, மாட்டாங்களோ என்கிற பயம் அவங்களுக்கு இருக்கு! நீங்கதான் அவசரப்பட்டு 'போயிடுத்து, போயிடுத்து'ன்னு டமாரம் அடித்து ஊருக்கே சொல்லிடுவீங்க போலிருக்கு!

 அவங்க இந்த முடிவு எடுத்து ஒரு வாரம் ஆச்சு, இந்த ஒரு வாரத்திலே உங்க கடைக்கு வந்துபோகிற வாடிக்கையாளர்களோ, தெரிந்தவங்களோ, ஊர் மக்களோ யாராவது உங்களை அவமரியாதை பண்ணினாங்களா?

 நீங்க, அந்த ரெண்டுபேர் முடிவை, சரியான முடிவுன்னு ஏத்துக்கிட்டு, மேற்கொண்டு தீவிரமா யோசிக்கிறீங்க, யானை தன் தலையிலே தானே மண்ணை வாரி போட்டுக்கறாப்போல, அந்த முடிவை ஏத்துக்கிட்டீங்க, வெட்கமாயில்லே, உங்களுக்கு? 

 அந்த ரெண்டு பேர் எடுக்கிற முடிவு ஏத்துக்கமுடியாது, நாலுபேரா எடுக்கவேண்டிய முடிவை ரெண்டுபேர் மட்டும் எடுத்தது தப்புன்னு ஊர்ஜனங்களுக்குச் சொல்லி, முடிவை மாற்றவேண்டிய நீங்களே, ஓடி ஒளியறீங்க, த்தூ! 

 அதெல்லாம் போகட்டும், ஏதோ மானம், மரியாதைன்னு திருப்பி திருப்பி சொல்றீங்களே, அது என்ன, எங்கே இருக்கு? எப்படி வந்தது?

 முகத்துக்கு எதிரே பார்க்கிறபோது, கும்பிட்டுவிட்டு, நகர்ந்ததும் நம்மைப்பற்றி அவதூறு பேசறவங்க தரதுக்கு பேர் மரியாதையா?

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைJebamalar 2019-04-10 06:10
தற்கால நடைமுறை வாழ்க்கையை அழகாக சித்தரித்து உள்ளீர்கள்... அருமையான கதை :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-10 06:49
ஜெபமலருக்கு என் நன்றி! தங்களுக்கு கதை பிடித்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைShanthi S 2019-04-10 00:53
very nice story Ravai 👌👌
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-10 06:03
Thanks a lot Shanthimma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைAbiMahesh 2019-04-09 20:33
Nice Story Sir! Aunty solra points la sooper :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 21:27
Thanks, Abhimahesh! Glad you liked the story!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைhari k 2019-04-09 16:53
Sir fantastic story..indraiya situation a supera expose panirukiga :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 17:41
ரொம்ப நன்றி, ஹரி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைmadhumathi9 2019-04-09 14:31
:yes: saattaiyadi sariyaana vilaasal :hatsoff: niraiya per moodathanamaa seyalpaduvathai kankoodaaga paarkkumpozhu kobathin alavu ellai meerugirathu steam :angry:
Arumaiyaana kathai. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 16:32
மதுமதிம்மா! உங்கள் சந்தோஷமே என் கதைக்கு கிடைத்த வெகுமதி! ரொம்ப ரொம்ப நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 13:58
அன்புள்ள சாகித்யராஜ்! சிறிய இடைவேளைக்குப்பிறகு சந்திக்கிறோம். நலமா? பாராட்டே நான் பாராட்டும் வகையில் நேரிடையாகவும் சுருக்கமாகவும் நச்சுனு இருக்கு! அதற்கு என் பாராட்டு!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைSahithyaraj 2019-04-10 10:23
Fine ji. Unga Ella short stories um padichiduvane but cmts poda konjam kastam aana indha story restrict Panna mudiyala ji. Thanks for sharing Ur valuable thoughts.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைViji. P 2019-04-09 13:53
Super sir :clap: 👏👍
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 14:07
மிக்க நன்றி, விஜி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைAdharvJo 2019-04-09 12:27
Well said uncle :clap: :clap: no comments 👍 aunty Oda part chumma power packed aga itundhadhu message....screen play was cool...andha mukadu pottu mukku sindhunga dialogue was very funny 😜😜 :D

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 13:55
Dear Jo! காமகண்ட்ஸ் இல்லைன்னு சொன்னாலும் பரவாயில்லை, நீ படிச்சாலே போதும், எனக்கு! வேலைப்பளுவுக்கிடையே என் கதையை சுடச்சுட படித்ததற்கு மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைSahithyaraj 2019-04-09 12:24
Nadaimurai unmai summa puttu puttu vachirukkeenga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை. 2019-04-23 14:02
ரொம்ப ரொம்ப நன்றி!, சத்யராஜ்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top