(Reading time: 2 - 3 minutes)

சிறுகதை - பிரிவின் பது....   - ஜெப மலர்

love

ய்  பார்த்து மா... என்று கூறியவாறே தன் யமாகாவில் இருந்து இறங்கினான் ஆறடி உயரத்தில் பார்ப்போரை திரும்பி பார்க்க வைக்கும் ஆணழகன் நிஷாந்த்... ஓடி சென்றுகீழே விழுந்திருந்த பெண் எழுவதற்கு வசதியாக ஸ்கூட்டியை தூக்கி தள்ளி நிறுத்திய படியே பெண்ணின் முகத்தை பார்த்த போது உதடுகள் ஒட்டி கொண்டது.. கண்கள் இமைக்க மறந்தது.. இதய துடிப்பு எகிறியது... 

சிறிது நேர இடைவெளிக்குப் பின் ஜீலி என்று வார்த்தையை வெளியிட்டது உதடுகள்...

பெண்ணவளின் கண்களோ நீரை சொரிந்தது....

கரங்கள் நடுங்க உதடுகள் துடிக்க உங்களை மறுபடியும் பார்த்து விட்டேன் நிஷா என்று கூறியவாறு மயங்கி சரிந்தாள்...

மயங்கினாலும், உங்களை மறுபடியும் பார்த்து விட்டேன்... என் காதல் நிஜம் என்று நம்புகிறீர்களா என்று வார்த்தை மட்டும் வெளி வந்தது... 

தண்ணீர் தெளித்து எழுப்பினான். விழித்து. கொண்டது ஜீலி மட்டும் அல்ல.. நிஷாந்த்தின் நினைவுகளும் தான்..

7வருடங்களுக்கு முன்...  இதற்கு பேர் காதல் இல்லை.. வாழ்க்கையில் இன்னும் ஒரு வருடம் போன என்னை யார் என்று அடையாளம் தெரியாது தினறி போய் விடுவ.. So இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நாம சந்தித்தால் காதல் பற்றி யோசிப்போம் என்று கூறிய போது அழுது கொண்டு சென்ற ஜீலியின் முகம் நினைவு வந்தது... 7ஆண்டுகளாக அவன் தேடி கொண்டு இருப்பதும் அந்த முகம் தானே...

கண்ணீரோடு கூறினான் I miss you my dear என்று...

நான்கு விழிகளும்  கலந்து போயின பிரிவின் துயர் மறந்து.... 

பிரசவ வலியை விட என்னவனின் 

பிரிவின் வலி கொடுமையானது... 

பிரிவின் வலியை தந்தவனே 

பிரிவின் துயரிலிருந்து தூக்கினான்... 

வலி மறைந்தது

வழி பிறந்தது... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.