(Reading time: 16 - 31 minutes)

 விமலா சரியான நேரத்துக்கு ஆஜரானாள்.

 " நீங்க ரெண்டு பேரும் ரெடியா? அப்ப வாங்க, மேனேஜர் வீட்டுக்கு போய்ட்டு வந்துடுவோம். ஏன்னா, எனக்கு இரவு எட்டு மணிக்கு லேடீஸ் கிளப்பிலே மீட்டிங் இருக்கு..."

 விமலாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!

 என்ன விஷயத்துக்காக மேனேஜர் வீட்டுக்கு போகிறோம் என்பதை தெரிந்துகொள்கிற ஆர்வமே இல்லாமல், என்னவோ கோவிலுக்கு போகிறமாதிரி, பேசறாளே, இவள் தெரிந்துதான் பேசறாளா, தெரியாமல் பேசறாளா?

 நடப்பது நடக்கட்டும்! ஆனால், மேனேஜரை உஷார்ப்படுத்துவோம் என அவருக்கு போன் செய்தேன்.

 " சார்! விமலாவுடன் அங்கே வந்துகொண்டிருக்கிறோம். அவளுக்கு விஷயமே தெரியாது! என்னிடம் அவள் கேட்கவுமில்லை! நீங்கதான் சமாளிக்கணும்............."

 " மகாதேவன்! கவலைப்படாதே! அதுக்கு இங்கே ஒரு ஆள் தயாரா வைத்திருக்கேன். உனக்கே சர்ப்பிரைஸ் ஆயிருக்கும்!"

 அவர்கள் வீட்டு வாசலில் இறங்கியதும், எங்களை வரவேற்றது, மேனேஜர், அவர் மனைவியுடன், எனது தாய்மாமனும்!

 " மாமா!" என்று அவரை பாசமுடன் அணைத்துக்கொண்டேன். 

 அதற்குள், மேனேஜரின் மனைவி கையில் ஆரத்தியுடன் விமலாவின் முன் நின்று ஆரத்தி எடுத்து, அவளை அணைத்தவாறு வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

 என் மனைவிக்கு ஆனந்தம் பெருகி ஓடியது!

 என் தாய்மாமன் விமலாவை பல வருஷங்கள் கழித்து சந்திப்பதால், இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

 திடுதிப்பென, விமலா எழுந்து நின்று, மாமாவையும், மேனேஜர், அவர் மனைவி மூவரையும் நமஸ்கரித்தாள்.

 இந்தக் காலத்துப் பெண்ணுக்கு இவ்வளவு பண்பாடு தெரிந்திருக்கிறதே என அவர்களுக்கு ஆச்சரியம்! ஏன், எங்களுக்கும்தான்!

 விமலா என்னவோ, அவர்களுடன் பலகாலம் பழகியதுபோல், சகஜமாகப் பழகினாள். குறிப்பாக, மேனேஐர் மனைவியை பெரிதும் வசியப்படுத்தினாள்.

 கலகலப்பாக இருந்தபோது, வீட்டுவாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து, மேனேஜரின் மகன் இறங்கினான்.

 " இவன்தான் என் மகன் நரேன்! இந்த ஊரிலே பிரபலமான பல மல்டிஸ்டோரி பில்டிங் கட்டிய பெரிய பில்டர்............"

 " ஓ! யூ ஆர் நரேன்! மங்களா ஹவுஸ், சிவா மேன்ஷன், பர்தீவ் ரிசார்ட், சர்க்குலர் ஹவுஸ் பரினீதா எல்லாம் கட்டி ஊரையே அசரவைத்த நரேனா! ஐ ஆம் வெரி ஹேப்பி டு மீட் யூ, நரேன்! ஐ ஆம் விமலா! எங்கப்பாதான் மகாதேவன்! அது எங்க அம்மா!"

 எல்லோரும் வாய் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, விமலா நரேனுடன் கைகுலுக்குவதையும், அவன் வெட்கத்துடன் புன்னகை செய்து ஏற்றுக்கொள்வதையும் என் மாமா வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அவர் வந்த காரியம் முடிந்தவிட்டதுபோல, ஒரு சந்தோஷம், அவர் முகத்தில்!

 " நரேன்! உங்க சாதனையிலே என்னை மிகவும் கவர்ந்த அம்சம், ஒரே நேரத்திலே இந்த நான்கு ப்ராஜெக்ட்டும் மூணே வருஷத்திலே முடித்து, எல்லா குடியிருப்புகளும் விற்று தீர்ந்துபோனதுதான்! பெரிய பெரிய கட்டிட ஜாம்பவான்களெல்லாம், ஒரே ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்கவே, பத்து வருஷங்களாகறப்ப, உன் சாதனைக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்............"

 கைதட்டல் காதுகளை துளைத்தது! அவர்களை அறியாமலேயே, விமலாவின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 " பின்னே என்ன! நான் வந்த காரியம் நல்லபடியா முடிந்துவிட்டது. முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கவேண்டியதுதான்........."

 " எதுக்கு மாமா? அடுத்த ப்ராஜெக்டுக்கா?"

 விமலாவின் அப்பாவித்தனமான கேள்வி, எல்லோரையும் மனமார சிரிக்க வைத்தது.

 மேனேஜர் இதற்கு மேலும் மூடி மறைப்பது தவறு என்று கருதி, பேசினார்.

 " விமலா! முகூர்த்தம் பார்க்கிறது, நரேனுக்கும் உனக்கும் டும்டும் மேளம் கொட்டி கல்யாணம் பண்ணிவைக்கத்தான். எங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப திருப்தி! நரேனுக்கும் சம்மதம்னு அவன்வெட்கப்படறதிலிருந்தே தெரியுது! நீ நரேனை புகழ்ந்து பேசி, மறைமுகமா உன் சம்மத்த்தையும் தெரிவிச்சிட்டே.............."

 " ஸ்டாப்! ஸ்டாப்! எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறீங்க? நரேனுடைய தொழில் திறமையை மனமார பாராட்டினேன். அதற்காக, நான் அவனை மணக்க சம்மதம் தந்ததாக எப்படி சொல்கிறீர்கள்

 மாமா! வயசிலே பெரியவர் நீங்க! இவங்களுக்கு, ஒருத்தி ஒருவனை கணவனாக தேர்ந்தெடுப்பது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.