(Reading time: 16 - 31 minutes)

எவ்வளவு நெருடலான விஷயம், எத்தனை காலம் பிடிக்கும், ஒருவரைப்பற்றி மற்றவர் எத்தனை விஷயங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதையெல்லாம் விவரமாகச் சொல்லுங்கள்! நரேன்! நீ தொழில்லே முழுநேரமும் உன் கவனத்தை செலுத்துவதனாலே, உன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் நீ சிந்திக்கவே துவங்கவில்லை, சரிதானே?"

 நரேன் முதல் முறையாக தலை நிமிர்ந்தான். அமைதியாக எல்லோரையும் கூர்ந்து கவனித்தான். கடைசியாக, விமலாவை சிறிய சிரிப்புடன் கண்ணுக்கு கண் சந்தித்துவிட்டு பேசினான்.

 " விமலா! முதலில், என்னை தயக்கமே இல்லாம, முதல் சந்திப்பிலேயே, வானளாவ பாராட்டின அழகை, என் நெஞ்சிலே நிரப்பி,

என் ஆயுள் உள்ளவரை, அதை நினைத்து நினைத்து, மகிழ்வேன். 

 ஒரு கட்டிடம் கட்ட எத்தனையோ விவரங்களை கவனிக்கிறோம். நிலப்பரப்பில் துவங்கி, குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, கட்டிடங்கள் பற்றிய விதிகள், நகரசபை லைஸன்ஸ்னு நிறைய அம்சங்களை கவனித்து முடிவு செய்தபிறகுதான், அஸ்திவாரமே போடறோம்.

 விமலா! நீ சொன்னதுபோல, நான் இன்னும் என் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி சிந்திக்கவேயில்லை.

 உன்னிடம் இவர்கள்நடந்துகொண்ட வித்த்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 அப்பா! அம்மா! என்னவோ, கடைக்குப் போய் கத்திரிக்காய் வாங்கிவருவது போல, விமலாவுக்கு தெரியாமலேயே, கத்திரிக்காயின் சம்மதம் கேட்காமலே அதை வாங்குவதுபோல, அவள் கல்யாணத்தை 

நீங்க முடிவு செய்வது, உங்க முடிவை அவள்மீது திணிப்பது, எந்தவித்த்திலே நியாயம்

 அம்மா! நீயும் ஒரு பெண்தானே! இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அவள் சம்மதம் பெறாமல், நீ முடிவு செய்யலாமா?

 அப்பா! மகாதேவன் சார், உன்னுடன் வேலை செய்கிறார் என்பதனாலே, அவர்மீது உன் முடிவை திணிக்கலாமா?

 மாமா! நீங்க அந்தக் காலத்து மனிதர்! பழைய ஆணாதிக்க கலாசாரமே ஊறிப்போயிடுத்து, உங்களுக்கு! இப்ப காலம் ரொம்ப மாறிடுத்து!

 விமலா! யூ டேக் யுவர் டைம்! எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை, என்னிடம் என்னென்ன கேட்கவேண்டுமோ அத்தனையும் கேள், இறுதியாக என்னை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், வருத்தமில்லை! நான் பெண்மையை மதிக்கிறேன். 

 அம்மா! நான் அடக்கமானவன் என்பதனால், குரலை உயர்த்திப் பேசாதவன் என்பதால் என்னை நீங்கள் பயந்த சுபாவக்காரனாக முத்திரை குத்தி, ஒரு கராத்தே ப்ளேக் பெல்ட் வாங்கின பெண்ணுடன் சேர்த்துவைக்க நினைக்கிறீர்கள். 

 நான் கோழையல்ல, அடக்கமானவன்! ஆழ்ந்து சிந்திப்பவன்! அவசரமாக முடிவு எடுக்காதவன், ஒரே ஒரு விஷயம் தவிர!..........."

 எல்லோருக்கும், விமலா உட்பட, அவன் தந்த சஸ்பென்ஸ் தாங்கமுடியாமல் தவித்தனர்!

 " அந்த ஒரே ஒரு விஷயம், விமலா அவளுடைய சம்மதம் தெரிவிக்க எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதுவரை காத்திருக்க என் ஆன்மா முடிவெடுத்துவிட்டது. இறுதியில், அவள் என்னை ஏற்காவிட்டாலும், அவள்மீது எனக்குள்ள மதிப்பு சிறிதளவும் குறையாது! 

 விமலா! மீண்டும் ஒருமுறை இவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்."

 கூடியிருந்த எவரும் கண்களில் தெரியவில்லை, விமலாவுக்கு! 

 பகவத் கீதையில், கண்ணன் அர்ஜுன னுக்கு விஸ்வரூப தரிசனம் தந்ததுபோல், விமலாவுக்கு நரேன் கண்ணனாகத் தெரிந்தான்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.