கணவன் ராஜா வெட்கத்துடன் சிரித்தவாறே, சுமதியை அணைத்துக்கொண்டான்.
" சுமதி! அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால், குலை நடுங்குது இன்றும்! அந்த ஒரு வினாடி நீ வந்து தடுக்கலேன்னா, நானேது, நீயென்னை கல்யாணம் செய்வதேது, மோகன் பிறப்பதேது?"
" அதை ஒரு கெட்ட கனவா மறந்துடுங்க! ஏதாவது தளர்ந்துபோன நேரத்திலே, மோகனிடம் சொல்லிடாதீங்க! அவன் பயந்துடுவான்!"
சுமதி நகர்ந்ததும், ராஜா அந்த நாட்களை மெல்ல அசை போட்டான்.
அப்போது அவனுக்கு வயது இருபது! பி.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.
அவன் எல்லா பாடங்களிலும் ஓரளவு தேர்ச்சியே பெற்று இருந்ததால், அவனை பேராசிரியர் அழைத்து எச்சரிக்கை செய்தார்.
" ராஜா! நீ இன்னும் அதிகமாக உழைத்தால்தான், இறுதி தேர்வில் பாஸ் மார்க் வாங்கமுடியும். இல்லையெனில், ஃபெயிலாகி மீண்டும் தேர்வு எழுதும்படி ஆகிவிடும்.
உன் அப்பாவுக்கு கிடைக்கிற வருமானம் போதாத காரணத்தால், நீ எப்போது பட்டம் பெற்று வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதித்து தருவாய் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்! அவரை ஏமாற்றிவிடாதே! அவரால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல், விபரீதமாக அவருக்கு ஏதேனும் ஆகிவிடும். புரிந்ததா?
உனக்கு பாடங்களில் சந்தேகம் இருந்தால், என்னிடம் வா! சொல்லித் தருகிறேன்........."
அந்த நேரத்தில் சுமதி அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும், பேராசிரியரின் முகம் மலர்ந்தது.
" ராஜா! உன் நல்ல காலம், சுமதி இந்த நேரத்தில் வந்திருக்கிறாள். அவளும் உன் வகுப்பில்தான் படிக்கிறாள், இல்லையா? அவளும் நீயும் சேர்ந்து படியுங்கள். ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து எப்படியாவது தேர்வில் பாஸ் மார்க் வாங்கிவிடுங்கள். வேலைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்........"
அன்றிலிருந்து, ராஜாவும் சுமதியும் அதிக நேரம் சேர்ந்து படித்து, தேர்வு நடந்த நாளன்று, நம்பிக்கையுடன் எழுத துவங்கினர்.
சுமதிக்கு எல்லா கேள்விகளுக்கும் விடை நினைவில் இருந்ததால், நன்றாக விடை எழுதினாள்.
ராஜாவும்தான்! ஆனால், சோதனையாக, பொருளாதார வினாத்தாளை படித்ததும், அவனுக்கு மூளை சூன்யமாகிவிட்டது! சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லோரும் வேகமாக விடை