(Reading time: 10 - 19 minutes)

எழுதியிருக்கவேண்டும்னு நினைக்கிறேன்."

 தொடர்ந்து இருவருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாக இருந்து, இருவரும் தம்பதியராக இணைந்து மோகனும் பிறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன!

 மோகன் இன்டர்வியூ நடக்கும் இடத்துக்கு போகும்போதே, அப்பா சொன்னதை சிந்தித்தவாறே சென்றான்.

 உண்மை! எது எப்படி நடக்கும் என்றோ, இப்படித்தான் நடக்கும் என்றோ, எவராலும் அறுதியிட்டு உறுதியாக கூறமுடியாது!

 அவரவர்க்கு ஒரு வாழ்க்கை அமைகிறது, அப்படி அமைகிற வாழ்வை ஏற்று சந்தோஷமாக வாழவேண்டுமே தவிர, எதற்கும் மனம் கலங்குவதோ, பயப்படுவதோ, தவறு என முடிவுக்கு வந்தான்.

 அடுத்த கணமே, அவன் வாயிலிருந்து விசில் நாதமழையாகப் பொழிந்தது!

 நேர்காணல் இடத்தை அடைந்தபோது, அவனுக்கு முன்பே இருபதுபேர் காத்திருந்தனர்.

 இவனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டபிறகு, மேலும்பத்து, இருபது பேர் சேர்ந்தனர்!

 நேர்காணல் துவங்கியது. ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். ஆனால் அதில் ஒரு முறையோ ஒழுங்கோ தெரியவில்லை!

 மோகன் அங்கிருந்த உதவியாளரிடம் சென்று விசாரித்தான்.

 " வந்திருக்கிற அத்தனை அப்ளிகேஷனையும் படிப்பு, அனுபவம், வயது எல்லாம் மதிப்பிட்டு, தரவரிசையில் ஒரு லிஸ்ட் தயாரித்து என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். அதன்படி, கூப்பிடுகிறார்கள்."

 மோகன் அந்த பட்டியலை வாங்கிப் பார்த்தான். அவன் பெயர் ......ஆங்! கடைசியாக இருந்தது!

 அவன் மேலும் குஷியாகிவிட்டான். தனக்கு நிச்சயமாக வாய்ப்பில்லை என தெரிந்துவிட்டதால், ஜாலியாக இருந்தான்.

 " நேர்காணல் முடிந்த அரை மணி நேரத்தில், முடிவு அறிவிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு நியமன உத்தரவும் உடனே வழங்கப்படும். அனைவரும் தயவுசெய்து காத்திருக்கவும்."

 அறிவிப்பைக் கேட்டு எல்லோரும் ஆர்வமுடன் காத்திருந்ததைப் பார்த்த மோகனுக்கு சிரிப்பு வந்தது!

 தரப் பட்டியலில் இருக்கிற முதல் பத்து பேரிலே எவருக்கோ ஒருவருக்கு கிடைக்கப்போகிற ஆர்டருக்கு, பாவம்! நாற்பது பேரும் ஏன் காத்திருக்க வேண்டும்?

 இறுதியாக, மோகனை அழைத்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.