" நான் என்ன செய்வது?"
" என்னிடம் சொன்னதை வேறு எவரிடமும் சொல்லாதே! சிரித்த முகத்தோடு இரு! இருவரும் சேர்ந்து யோசித்து இதற்கொரு தீர்வு காண்போம். தேர்வு முடிவுகள் வரும்வரை இதுபற்றி யாரிடமும் மூச்சு விடாதே! அதிர்ஷ்டம் உன்பக்கம் இருந்து நீ கிறுக்கின விடையே சரியாக இருந்து உன்னை காப்பாற்றலாம், சரியா? கடவுளை நம்பு! பி.ஏ. பாஸ் பண்ணாதவர்களும் வாழவில்லையா, உலகத்திலே? ஏன், எழுதப் படிக்கத் தெரியாதவர்களே வாழவில்லையா? உன் அப்பாவையும் சிறுகச் சிறுக நம்வழிக்கு கொண்டுவருவோம், அதுவரை பொறுமையாயிரு! இனி தப்பான முடிவெடுக்கமாட்டேன்னு என் கையில் சத்தியம் செய்துகொடு!"
ராஜா அமைதியானான். சிந்திக்க சிந்திக்க சுமதி சொல்வதில் உள்ள யதார்த்தம் அவனுக்கும் புரிந்தது!
காலப்போக்கில், எத்தனையோ மளமளவென நடந்தன. தேர்வு முடிவுகள் வந்த அன்று, காலையிலிருந்தே சுமதி, ராஜாவையே சுற்றி சுற்றி வந்தாள். அவனை பாதுகாப்பதே அவள் நோக்கம்.
அதற்கு அவசியமே இல்லாமல் போனது. முடிவுகள் வெளியானதும், இருவரும் சேர்ந்தே முடிவுகளை பார்த்தனர்.
சுமதி முதலில் ராஜாவின் முடிவைத்தான் பார்த்தாள்.
அவன் நம்பரை பார்த்ததும், ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து அவனை இறுக கட்டியணைத்து முத்தமிட்டாள்.
அவள் கண்களிலிருந்து பொலபொலவென நீர் கொட்டியது.
" முட்டாள்! லூஸு! தப்பான முடிவுக்கு வர இருந்தியே, இப்ப என்ன சொல்றே? இடியட்!"
" திட்டு, சுமதி! எவ்வளவு வேண்டுமானாலும் திட்டு! உனக்கு அந்த தகுதி உண்டு! நீ அன்று என்னை தடுத்திராவிட்டால், நான் நிச்சயமாக இன்று இந்த நல்ல செய்தியை அறிய இருந்திருக்க மாட்டேன்.........."
அதைவிட ஆச்சரியம், மதிப்பெண் கிடைத்ததும் அந்த லிஸ்டைப் பார்த்தால், ராஜா பொருளாதார பாடத்தில்தான் அதிக மார்க் வாங்கியிருந்தான்.
அது எப்படி? இன்றுவரை இருவருக்கும் அது புரியாத புதிர்!
" ராஜா! மகாபாரதக் கதையிலே, துரியோதனின் தம்பி, பாஞ்சாலியை துயிலுரிகிற காட்சியில், அவள் இரு கைகளையும் உயரே தூக்கி, 'கண்ணா!" என கடவுளை அழைத்தபோது, அவன் ஓடிவந்து அவளை காப்பாற்றியதுபோல, உனக்குப் பதிலாக கடவுள் விடை