பைகளையும் வைத்துவிட்டு, " பிரபா! தாகமாயிருக்கு, தண்ணீர் கொண்டுவா" என கூவினாள்!
தண்ணீருடன் எதிரே வந்து நின்றது, பிரபாகர் இல்லை, புஷ்பா!
" புஷ்பா! நீ எப்ப வந்தே?"
" வந்தது நானில்லே, நீதான்!"
" என்ன சொல்றே?"
" இது என் வீடு! நீதான் ஏதோ ஞாபகத்திலே, இதை உன் வீடுன்னு நினைத்து உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்து எனக்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவு போடறே!" என்று சொல்லி சிரித்தபோதுதான், சுசீலாவுக்கு தன் தவறு புரிந்தது!
அவளுக்கு பேரதிர்ச்சி! தன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கா தனக்கு ஞாபகமறதி வந்துவிட்டது என்ற அதிர்ச்சி!
இந்த சம்பவத்தைக் கேட்ட பிரபாகருக்கும் பேரதிர்ச்சி!
பெங்களூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தது, சுசீலாவை இந்த அளவுக்கு பாதிக்குமென்று பிரபாகரால் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லை!
இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன. சென்னை வந்ததிலிருந்து தொடர்ந்து வீட்டுவேலை செய்பவளின் முகமும் பெயரும் மறந்து, அவளை வீட்டுவாசலில் 'யார் நீ? என்ன வேணும்?' என்று கேட்டு நிற்கவைத்துவிட்டாள்!
" பிரபா! நம்ம மூத்த மகன் சுந்தர், டில்லியிலே கரோல்பாகிலேதானே வசிக்கிறான், அவனுக்கு போன் பண்ணி, கரோல்பாகிலிருந்து தினமும் குலுமணாலி போற டூரிஸ்ட் பஸ் விவரங்களை கேட்டுச் சொல்லுங்க! பக்கத்து வீட்டு மீரா கேட்டாள்......"
பிரபாகருக்கு அப்போதுதான் அடிவயிற்றில் தீ பரவியது!
மூத்தமகன் வசிப்பது அமெரிக்காவில், டில்லியில் அல்ல!
அவன் பெயர் 'சுந்தர்' அல்ல, ரவி!
டில்லியில் வசிப்பது இளைய மகன், ரமேஷ்! அவனும் கரோல்பாகில் வசிக்கவில்லை, காந்திநகரில் வசிக்கிறான்!
மறதியின் உச்சம், பக்கத்து வீட்டில் வசிப்பவள் பெயர் மீரா அல்ல, புஷ்பா!
பாவம், பிரபாகர்! என்ன செய்வான்?
" சுசீலா! உனக்கு மறதி நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது, டாக்டரிடம் கேட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டே ஆகவேண்டும், வா! போகலாம்"
" பிரபா! சின்னச் சின்ன மறதிக்கு யாராவது டாக்டரிடம் சிகிச்சை எடுத்துப்பாங்களா? வீட்டிலே நான்தான் தினமும் ஒழுங்கா சமைக்கிறேன், வேலைக்காரியிடம் பேசி வேலை வாங்குகிறேன்,