சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் தெரிகிறது! எத்தனை நீண்ட சோதனைக்காலத்துக்கும் இறுதியில் விடிவு உண்டு!
இவைதான் நாம் சோதனைகளின்போது, சோர்ந்துவிடாமலிருக்க உதவும் தாரக மந்திரம்!
பிரபாகர்! உங்கள் மனைவியை பாடாய் படுத்துகிற இந்த நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்படலாம். இப்போதுதான் தினமும் ஒரு கண்டுபிடிப்பு வந்துகொண்டிருக்கிறதே! அதனால், தளர்ந்துவிடாமல் தைரியமாக சோதனையை எதிர்கொள்ளுங்கள்!"
பிரபாகரை பெரும் அளவுக்கு தளரவைத்த புதிய தகவல், அவர் மனைவி சுசீலாவை பாதித்துள்ள நோய், அல்ஷைமர்ஸ்! பிரபாகருக்கு இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை தெரியும். அவருடைய மகன், பிரபாகரின் நண்பர்!
பல வருஷங்களாக நண்பரும் அவர் மனைவியும், நோயாளியினால் படும் கஷ்டங்களை, அவர்கள் சொல்லி, அவனுக்குத் தெரியும்!
சுசீலாவுக்கு ஐம்பத்திரண்டு வயதுதான் முடிந்திருக்கிறது. பொதுவாக, இந்த நோய் முதுமையில்தான் வரும்! தன் மனைவிக்கு மட்டும் ஏன் இந்த வயதிலே வந்துள்ளது?
" இறைவா! நீயே சொல்! இது எந்தவிதமாகப் பார்த்தாலும், அநீதி இல்லையா? எத்தனையோ தீயவர்கள் உலகில் இருக்க, நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்துவரும் என் மனைவி சுசீலாவுக்கு ஏன் இந்த நோயை கொடுத்தாய்?"
" பிரபாகர்! உலகில் நல்லது, கெட்டது இரண்டுமே உள்ளது. கூடுமான வரையில், நான் கவனமாக இருந்து தவிர்ப்பது, ஒருசாராருக்கே வாழ்வு முழுவதும் கெடுதலும், இன்னொரு சாராருக்கு நல்லதும் நடப்பது! ஒவ்வொருவர் வாழ்விலும், நல்லது, கெட்டது இரண்டும் கலந்துதான் வரும். நீயே சொல்! உன் அறுபது வயது வாழ்வில், இதுவரை எல்லாமே நல்லதுதானே நடந்திருக்கிறது? உனக்கு நல்ல கல்வியை தந்தேன், நல்ல உத்தியோகத்தில், பெரும் பதவியில் வைத்தேன், சமுதாயத்தில் பெயரும் புகழும் அளித்துள்ளேன், நல்ல குடும்பத்தை அமைத்து, பிரியமான மனைவி, இரண்டு மகன்கள், இருவருக்கும் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல மனைவி எல்லாம் தந்துள்ளேன், இவ்வளவு நல்லவைகளை தந்தபிறகுதானே, நீ கெடுதல் என நினைக்கிற இந்த நோயை உன் மனைவிக்கு தந்திருக்கிறேன்......."
" அதெல்லாம் சரி, இறைவா! என் மனைவி சுசீலாவுக்கு ஏன் தந்தாய்?"
" சரி, இப்போதுகூட அதை என்னால் உன் குடும்பத்தில் உள்ள வேறொருவருக்கு மாற்றமுடியும்? நீயே சொல்! உன் மகன்களில் ஒருவனுக்கு தரட்டுமா? இருவருமே