(Reading time: 11 - 22 minutes)
No Lock without key

இப்போதுதான் வாழ்க்கையை துவங்கியிருக்கிறார்கள், அவர்களுக்கா இந்த நோயை தரச்சொல்கிறாய்?..........."

 " இறைவா! நீ சொல்வது, நியாயம்தான்! எனக்கு அந்த நோயை கொடு! என் மனைவியை விட்டுவிடு, ப்ளீஸ்!"

 " நன்றாக யோசித்துச் சொல்! இப்போது நீயும் உன் மனைவியும் சென்னையில் வசிக்கிறீர்கள். உன் மூத்த மகன் அமெரிக்காவிலும், இளையவன் டில்லியிலும் வசிக்கிறார்கள்! இந்த நிலையில், நோயில் நீ பாதிக்கப்பட்டால், உன் மனைவியால் தன்னந்தனியாக உன்னை கவனித்துக்கொள்ளமுடியுமா? உன் மகன்களை அவர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உன்னால் சென்னைக்கு வரச்சொல்லமுடியுமா? பாவம், உன் மனைவி! நோயின் ௧டுமையைவிட, நோயாளியை தன்னந்தனியாக கவனித்துக்கொள்ள வேண்டிய சுமையும் வலியும் அதிக கொடுமை! இப்போது புரிகிறதா? நான் உன் மனைவிக்கு செய்திருப்பது நல்லதா, கெட்டதா என்று?"

 பிரபாகர் இறைவனின் காலடியில் விழுந்து கிடந்தான்.

 இறைவனுக்கு பிரபாகரனைப்போல எத்தனையோ பேருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் உள்ளதால், அவர் மறைந்தார்!

 டாக்டர் கூறியது மிகவும் சரி! நாளாக ஆக, சுசீலாவுக்கு நோய் முற்றி அவளுக்கு மலஜலம் கழிப்பதிலிருந்து குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது, ஆடை உடுத்துவது எல்லாமே பிரபாகரன் செய்யும்படி ஆகிவிட்டது.

 அவருக்கும் முதுமையின் பிணிகளோடு மன அழுத்தமும் அதிகமாகி சுசீலாவுக்கு பணிவிடை செய்கிற பொறுமை கடந்துபோய், ஒருநாள், இறைவனை மறுபடியும் அழைத்தார்.

 " இறைவா! என்னால் முடியவில்லை! சுசீலா என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறாள், எரிச்சல் ஊட்டுகிறாள், தாங்கமுடியாமல் நான் அவளை கோபத்தில் வாய்விட்டு " இப்படி என் உயிரை வாங்குவதைவிட, நீ செத்துத் தொலைக்கக்கூடாதா?" என்று சபிக்கிறேன். 

 அது நான் அவளுக்கு செய்கிற மிகப் பெரிய துரோகமில்லையா?

 இறைவா! உன்னைத் தவிர, எனக்கு வேறு யாரும் உதவமுடியாது, செய்வாயா?"

 " என்ன உதவி எனச் சொல்! முடியுமானால் கட்டாயம் செய்கிறேன்."

 " இறைவா! சுசீலாவின் உயிரை முடித்துவிடச் சொல்ல, எனக்கில்லை உரிமை! அதனால், என் உயிரை எடுத்துக்கொண்டுவிடு! என்னால் தாங்கமுடியவில்லை........"

 பிரபாகரன் குலுங்கி அழுதார். இறைவன் பிரபாகரை ஆறுதலாக முதுகில் தடவிக்கொடுத்து, ஒரு கேள்வி கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.