அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பழகுகிறேன்,.........."
" அதெல்லாம் ஒருபக்கம்; இன்னொரு பக்கம், இப்போதெல்லாம் உனக்கு இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியலே, டிரஸ்கூட சரியா போட்டுக்கிறதில்லே, குளிக்கப்போனவ, பாத்ரூமிலே குருட்டு யோசனை பண்ணிண்டு எதுக்கு அங்கு இருக்கிறோம்னு தெரியாம நெடுநேரம் சும்மா உட்கார்ந்திருக்கே........."
ஒருவழியாக, அவளை சம்மதிக்கவைத்து, டாக்டரிடம் அழைத்துச்சென்று அவர் பரிசோதித்தபிறகு, கண்டுபிடித்தார், சுசீலாவுக்கு 'அல்ஷைமர்' ஞாபகமறதி நோய்!
டாக்டருக்கே ஆச்சரியமாக இருந்தது, முதுமையிலே வரக்கூடிய இந்த நோய், சுசீலாவுக்கு எப்படி ஐம்பத்திரண்டு வயதிலேயே வந்தது என்பதே!
" பிரபாகர்! இது அல்ஷைமர்ஸ் எனும் நோய்! சிறிய அளவு ஞாபகமறதியில் துவங்கி, போகப்போக தன்னையே மறக்கிற அளவுக்கு முற்றிவிடும். இந்த நோயாளிகளை கவனித்துக்கொள்ள இருபத்துநான்கு மணிநேரமும் ஒருவர் கூடவே இருக்கவேண்டும். ..........."
" இதற்கு சிகிச்சை, மருந்து, எது உண்டோ உடனடியாக துவங்கிடுங்க, டாக்டர்! ஆபரேஷன் தேவையானாலும் செய்யலாம், செலவைப்பற்றி கவலையில்லை, அவள் குணமாகி பழையபடி நல்லமுறையில் எங்களுடன் பழகவேண்டும்......"
" சாரி, பிரபாகர்! நோயை குணப்படுத்த மருந்தோ, அறுவை சிகிச்சையோ, எதுவுமே கிடையாது. இது, சாதாரணமாக அறுபத்தைந்து வயதுக்குமேல் உள்ள முதியோருக்கு ஏற்படும். உங்க மனைவிக்கு இந்த வயதிலேயே வந்திருப்பது ரொம்ப அதிசயம்.
நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளிக்கு இந்த நோயால் மரணம் ஏற்படாது, பழக்கங்கள் ஒவ்வொன்றாக மறக்கும்போது, சாப்பிடவும் மறந்துபோகும். வாயில் திணித்தாலும், விழுங்கத்தெரியாமல், வெளியே துப்புவார்கள். உடம்பு பலவீனமாகி, வேறு ஏதாவது நோய் தொற்றி, மரணம் சம்பவிக்குமே தவிர, இந்த நோயால் ஏற்படாது. மூளையிலுள்ள செல்கள் முழுவதுமாக செயலிழந்து போவதுதான், அல்ஷைமர்ஸ்!
பிரபாகர்! இந்த நோயாளிகளை கவனித்துக்கொள்ள, மிகுந்த பொறுமை அவசியம்!"
பிரபாகர் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். அவரைத் தொட்டு உலுக்கி எழுப்பி, டாக்டர் தைரியம் கொடுத்தார்!
" வாழ்க்கையிலே, மறக்கக்கூடாத இரண்டு உண்மைகள்:
சாவியில்லாத பூட்டு இல்லை! ஆம், எந்தப் பூட்டானாலும் அதற்கொரு சாவியுண்டு; அந்தச் சாவி தொலைந்தாலும் மாஸ்டர் கீ எனும் எந்தப்பூட்டையும் திறக்கும் சாவி உண்டு!