(Reading time: 11 - 22 minutes)
No Lock without key

சிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை! - ரவை

" பிரபா! சாம்பாரிலே உப்பு போட்டேனாஇல்லையான்னு தெரியலே, கொஞ்சம் ருசி பார்த்து சொல்லேன்!"

" சுசீலா! உனக்கு முழுநேரமும் உதவி செய்வதற்காகத்தானே, நான் எந்த வேலைக்கும் போகாமல், நாள் முழுவதும் வீட்டோடு இருக்கிறேன்! இதோ! ருசி பார்த்துச் சொல்கிறேன்...."

" ஒரு சின்ன காரியம்! இதற்கா இவ்வளவு பீடிகை! இப்பல்லாம், மறதி அதிகமாயிருக்கு! ..........."

" நானும் கவனிக்கிறேன், உன் மனசிலே வேறு ஏதோ ஒரு விஷயம் ஆழமா புகுந்து உன்னை பாடாய் படுத்துதுன்னு நினைக்கிறேன்........."

" வேறென்ன? பெங்களூரிலே எனக்குப் பிடித்த ஆசிரியர் வேலையை, நல்ல ஸ்கூல்லே, செய்துகொண்டிருந்த என்னை உன் சௌகரியத்துக்காக, ராஜினாமா செய்யவைத்து, சென்னைக்கு அழைத்துவந்து, வேலையில்லாம வீட்டிலே உட்கார்த்தி வைத்திருக்கிற கொடுமைதான்! எல்லாம் உன்னால் வந்தவினை!"

" சுசீலா! நான் திட்டமிட்டா அப்படி செய்தேன்? பெங்களூரிலே நான் வேலைசெய்த கம்பெனியிலே எனக்கு அறுபது வயதானதும், கட்டாயமா ரிடையராக்கிட்டாங்க, வீட்டிலே வெட்டியா இருக்கிறதுக்குப் பதிலா, ஏதாவது வேலை பார்க்கலாமேன்னு பல இடங்களுக்கு மனுப் போட்டதிலே, இந்த சென்னை வேலை, நல்ல சம்பளத்தோட, கிடைத்தது, எனக்குப் பிடித்த சேல்ஸ் வேலை!......"

" பின்னே ஏன் அந்த வேலையை ராஜினாமா செய்தீங்க?"

" வேலையிலே சேர்ந்தபிறகுதான் தெரிந்தது, அது ஒரு டுபாக்கூர் கம்பெனின்னு, கொள்ளை லாபம் அடிப்பதற்காக, கலப்படப் பொருளை விற்று, வாங்கிச் சாப்பிடறவங்க உயிருக்கு ஆபத்து விளைவிக்கிற கம்பெனின்னு! எந்த நேரமும் அரசாங்கம் அந்த கம்பெனியை சீல் வைத்து வழக்கும் போடப்போறாங்க, பார்!"

" அதனாலென்ன ஆச்சு? என் நல்ல வேலையும் போச்சு! பெங்களூரை விட்டு சென்னை வந்ததுதான் கண்ட பலன்!"

" சாரி, டியர்! சென்னை வந்தது உன்னை இந்த அளவு பாதிக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லே......."

சுசீலாவை எந்த அளவு பாதித்தது என்பது போகப்போகத்தான் தெரிந்தது, பிரபாகருக்கு!

 வழக்கமாக கறிகாய் வாங்கிவருவது, சுசீலாவுக்குப் பிடித்தமான வேலை! அப்படித்தான் அன்று தூக்கமுடியாத பளுவை தூக்கிக்கொண்டு மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்பிய சுசீலா, திறந்திருந்த பக்கத்து பிளாட்டுக்குள் நுழைந்து சோபாவில் பொத்தென அமர்ந்து கறிகாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.