(Reading time: 12 - 24 minutes)

ஏறும்முன்ன போயிட்டு வாங்க”

தலையை பலமாக ஆட்டிவிட்டு என் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே காய்கறி கடை நோக்கி நடைபோட்டேன்.

திரும்பி வருகையில் சற்று சூடாக்த்தான் இருந்தது.எங்கள குடியிருப்பின் வாயிலில் ஒரு மரத்தடியில் சற்று அமர்ந்தேன்.

“என்னங்க ராகவன்.சில்லறய மறந்து வந்துட்டீங்க”குரல்கேட்டு திடுக்கிட்டேன்.

எதிரே என்னைவிட சற்று வயதில் மூத்தவராக நல்ல தோற்றத்துடன் ஒருவர் நின்றிருந்தார்.அவர் யாரென எனக்கு புலப்படவில்லை.புரியாமல் விழித்த என் கையில் சில்லறையை திணித்துவிட்டு ஒரு புன்னகையுடன் பக்கத்தில் அமர்ந்தார்.

“நன்றி.நீங்க?”

“என் பேர் சிவராமன்..உங்க பக்த்துவீடு தான்.காய்கறி கடையில ஏதோ நினைவா சில்லறை வாங்காம வந்துட்டீங்க.கடைகாரர் என் கிட்ட கொடுத்தாரு என்ன சோர்வா இருக்கீங்க.சுகர் இருக்கா”

தூரத்நில் தெரிந்த முகம் இப்போது புலப்பட்டது

“ஆமாங்க அது இருக்கு..வெயில் முடியலை.சரின்னு இங்க கொஞ்சம் உட்கார்ந்தேன்.உங்களை பார்க்கனும்னு நானும் நினைச்சிருந்தேன் சமயமே வாய்க்கல்ல”

“பரவாயில்லைங்க.உங்க வீட்டம்மா நேத்து தான் வந்தாங்க.நாங்க வந்த இந்த இரண்டு வாரத்துல உங்க வீட்டம்மா தான் பெரிய உதவி.பால் முதல் வேலைகாரம்மா வரை எல்லாம் ஏற்பாடு பண்ணி குடுத்தாங்க.”

என்ன சொல்வது என்று தெரியாமல் இஇஇஇ என்று இளித்துவைத்தேன்.

“வாங்க பேசிட்டே போலாம் வீட்டுக்கு”

அடுப்படி தேவி என் கண்ணில் தெரிய வீட்டுக்கு கிளம்பினேன்.

அன்றும் அன்று தொடர்ந்த சில நாட்களும் என்னால் வீட்டில் இருக்கமுடியவில்லை.இது என் வீடு தானா என்று சந்தேகம் வந்ததது எனக்கு.அமைதி சாந்தி எல்லாம் நிறைந்திருந்தது.இப்போதெல்லாம் புது நண்பி அதான் சிவராமன் அவரின் மனைவி புஷ்பாவுடன் தான் அதிகம் செலவிடுகிறாள்.விஜயா அவ்வப்போது வெளியே செல்வதும் அவள் நண்பிகளுடன் ஏதாவது செய்துவிட்டு வருவதும் இயல்பு தான்.ஆனால் வீட்டினுள் வந்தவுடன் அவள் அவதாரம் எப்படி மாறுகிறது என்று இதுவரை புரிந்ததில்லை எனக்கு.எப்போதெல்லாம் அமைதி கிடைக்காதா என்று நினைத்திருக்கிறேன்.ஆனால் இப்போது இந்த அமைதி என்னை படுத்தியது.வேண்டியது கிடைத்தபின்னும் அனுபவிக்க தெரியாமல் அவதிபடுவது தானே மனித

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.