(Reading time: 12 - 24 minutes)

இயல்பு.விஜயாவின் இந்த மாற்றம் என்னை ஏனோ பயமுறுத்தியது.புயலுக்கு முன் அமைதியாக அச்சுருத்தியது.இன்று எப்படியும் அவளிடம் கேட்டுவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவளுக்காய் காத்திருந்தேன்.வெகு நேரம் கிடைத்தது அவள் தரிசனம்.

“விஜயா..இங்க வா.கொஞ்சம் பேசனும்”

“என்ன சொல்லுங்க”

“நான் ஒன னு சொல்லனும்.கோவப்படாம கேட்கறியா”மென்று விழுங்கினேன்.

“என்ன சொல்லுங்க…ராத்திரி அடை பண்ணணும்”

“அது இருக்கட்டும்.இப்போ எல்லாம் ஏதோ மாற்றம் தெரியுதே உன்கிட்ட.என்ன ஆச்சு.என் மேல ஏதாவது பெரிய கோபமாஉனக்கு உடம்பு எதா சரியில்லையா..என் மண்டை கொடையுது…ப்ளீஸ் எதா இருந்தாலும் சொல்லு விஜயா…அழாத குறையாக கூறி முடித்தேன்.

பதில் வருமென எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.சிறு புன்னகை வீசிவிட்டு சென்றாள்.இது மேலும் என்னை குழப்பியது.இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தேன்.அமெரிக்க மகனுக்கு பேசலாம் என அவனை அழைத்தேன்.

“சொல்லுங்கப்பா..ஏதாவது அவசரமா?மீட்டிங் இருக்கு .முடிஞ்சு கால் பண்ணவா?”

அவன் குரலில் அவன் அம்மா சாயல் தெரியும்.

“இல்ல பா.கொஞ்சம் பேசலாம்ன்னு தான் கால் பண்ணேன்.நீ அப்புறம் பண்ணுப்பா”

இணைப்பு துண்டித்தேன்.தூக்கம் கொள்ளவில்லை.எப்போது தூங்கினேன் தெரியவில்லை.கண்விழிக்கையில் ஏலக்காய் சர்க்கரை வாசம் ஆளை தூக்கியது.

இந்த சர்க்கரை நோய் கண்டுபிடித்ததிலிருந்து வாயால் கூட சர்க்கரை என்று உச்சரிக்க தடா.இந்நிலையில் இன்று என் வீடிடில் கேசரி?!இருக்காது அவள் வேறு யாருக்காகவோ செய்கிறாள்.துளி கிடைத்தால் கூட போதும் நமக்கு என்ற எண்ணவோட்டத்தோடு பள்ளியெழுச்சிக்காக காத்திருந்தேன்.இதோ கேட்கிறது அவள் குரல்.

“என்னப்பா இப்படி தூக்கம்.நாளும் கிழமையுமா.சீக்கரம் எழுந்து வாங்க”

ஆனால்இது அமைதி கீதமாக இருந்தது.

இன்று என் அப்படி நல்ல நாள்.ஓ…அட எப்படி மறந்தேன்.என்னுடைய பிறந்தநாள்.திருமணம் ஆன புதுதில் என் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடிய ஞாபகம்.அதன் பின்னால் படிப்படியாக குறைந்து பின் மற்ற நாள் போல அர்ச்சனைகளும் ஆரத்திகளும்.இன்று ஏனோ விஷேமாக கொண்டாடுகிறாளே.போன வாரம் மருத்துவரிடம் சென்று வந்தோமே….அதில் ஏதாவது…இது என்ன என எண்ணம இப்படி ஓடுகிறது. எதுவானாலும் பரவாயில்லை இன்றைய தினத்தை மகிழ வேண டியது தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.