(Reading time: 13 - 26 minutes)
Couple

 " அண்ணே!" என்று ஓடிப்போய் அவரை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள், கிருத்திகா!

 அவள் முதுகில் ஆறுதலாகத் தடவிக் கொடுத்து அவரும் ஒரு சொட்டு கண்ணீர் வடித்தார்.

 " தங்கச்சி! இப்பத்தான் கேள்விப்பட்டேன், அந்த அயோக்கியன் ராவோடு ராவா பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிட்டான்னு! அவன் அப்படி செய்வான்னு நான் கனவிலேகூட நினைக்கலே! குடும்பத்தோட ஓடிட்டான்! இப்ப என்ன செய்யறதுன்னு புரியலே! தங்கச்சி! சத்யாவுக்கு இதை அவசரப்பட்டு தெரிவிச்சிடாதே! அவன் தாங்கமாட்டான்! ஹார்ட் பேஷண்ட், ஏற்கெனவே! நாமே என்ன செய்யலாம்னு யோசிப்போம், சரியா?"

 " எனக்கென்ன தெரியும் அண்ணே! நீங்க பார்த்து என்ன செய்யணுமோ, அதை செய்யுங்க!"

 " நல்லவேளை! இந்த விஷயத்தை யாரும் பத்திரிகைகாரங்களிடம் இதுவரை தெரிவிக்கலே, எந்த நியூஸ்பேப்பரிலும் செய்தி வரலை!"

 " மாமா! உடனடியா போலீஸிலே கம்ப்ளைண்ட் கொடுப்போமா? அந்த அயோக்கியனை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிடுவாங்க!"

 " அதுசரிடா! ஆனா, புகாரை உங்கப்பா தான் கொடுக்கணும்னு சொல்வாங்க! தவிர, அந்த அயோக்கியனுக்கு எந்த நம்பிக்கையிலே கொடுத்தீங்க, அவன் சொத்து அடமானம் வைச்சு கடனை வாங்கியிருந்தால், அந்த பத்திரத்தை கொண்டான்னு கேட்பாங்க! ஆமாம், தங்கச்சி! சத்தியா அவனுக்கு எதை நம்பி அத்தனை பணத்தைக் கொடுத்தான்?"

 " எனக்கு முழு விவரம் தெரியாதுண்ணே! எப்படியோ அவரை நம்பவைத்து கழுத்தறுத்துட்டாண்ணே!"

 " சரி, அழுவாதே! நான் விசாரித்த வரையிலும், அவன் இந்த மாதிரி இன்னும் சில பேரை நம்பவைத்து ஏமாத்திருக்கான்னு தெரியுது. ஆமாம், சத்தியா எப்போ திரும்பி வருவான்?"

 " வேலை முடிய எத்தனை நாளாகும்னு தெரியலே, முடிந்ததும் திரும்பிடறேன்னு சொன்னாரு......."

 " சத்தியாவிடம் போனிலே பேசட்டுமா?"

 " ஐயோ! விஷயத்தை கேட்டதும் அவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, இந்தக் குடும்பத்தின் கதி? வேண்டாண்ணே!"

 " விஷயத்தை சொல்லாம, எப்ப வரேன்னு மட்டும் கேட்கலாமா?"

 " எதுக்காக கேட்கறீங்கன்னு விசாரிப்பாரே......."

 " அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே, ஏதாவது காரணம் கண்டுபிடித்து சொல்லிடறேன், கவலைப்படாதே! ஏன்னா, இந்த சமாசாரத்திலே சத்யா இல்லாம எந்த நடவடிக்கையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.