(Reading time: 13 - 26 minutes)
Couple

அந்த நேரத்தில் எல்லாம் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் விளங்கும். இப்ப என் வாழ்க்கையையே எடுத்துக்குங்க! பத்து வருஷம் முன்பு, நான் கிராமத்திலே விவசாயம் பார்த்துக்கிட்டு, உலக விவகாரம் அதிகமா தெரியாமல் அப்பாவியா இருந்தேன். திடீர்னு, சேர்ந்தாற்போல, மூன்று வருஷம் விவசாயம் மழை பெய்யாம பொய்த்தபோது, குடும்பத்தோட ஓட்டாண்டியா கிராமத்திலிருந்து இங்கு ஓடிவந்தேன். நீங்க சொல்கிறமாதிரியே, நானும் அப்ப, கடவுளை சபித்தேன். ஏன்னா, அப்ப எனக்கு தெரியாது, என் வாழ்க்கையிலே அது ஒரு பெரிய நல்ல மாற்றத்தை தரப்போவுதுன்னு தெரியாது, என் மகன் இப்ப காலேஜிலே படிக்கிறான், ரெண்டு வருஷத்திலே பட்டம் வாங்கினதும், அவனை மேற்படிப்புக்கு அமெரிக்கா அனுப்பிடுவேன், அங்கே அவன் போகப்போக நல்லா செட்டிலாகி, எங்களையும் கூப்பிட்டுக் கொள்வான். இந்த முன்னேற்றமோ, மாற்றமோ, கிராமத்திலே இருந்திருந்தால் கிடைத்திருக்குமா? சொல்லுங்க! அதனாலே, எது நடந்தாலும் கொஞ்சம் பொறுமையா ஆற அமர யோசித்து நடப்பதை ஏற்றுக்கணும், நடப்பதெல்லாம் நம்ம நல்லதுக்குத்தான்னு நம்பணும்........"

 " சத்யா! உன் நல்ல மனசுக்கு ஏன் கடவுள் சோதனை மேல் சோதனையா கொடுக்கிறார்னு எனக்கு தெரியலே............"

 " சோதனையா? நல்லதுதானே! அப்பத்தானே நான் பக்குவப்பட முடியும். நீங்க சொன்னீங்களே, வேதாந்தம் நடைமுறைக்கு சரிவராதுன்னு, அது சரியா தப்பான்னு தெரிஞ்சிடும்."

 " தங்கச்சி! சத்யாவுக்கு குடிக்க, சாப்பிட ஏதாவது கொடும்மா! அவன் சாப்பிட்டபிறகு, நான் மேற்கொண்டு பேசறேன். பாவம்! களைப்பா வந்திருக்கிறான்......"

 கிருத்திகா கொண்டுவந்த உணவையும் காபியையும் ஏற்றுக்கொண்டுவிட்டு, சத்யா மச்சானை ஏறிட்டுப் பார்த்தார்.

 " நாங்க ரெடி, நீங்க ரெடியா?" பார்வை!

 " சத்யா! நான் இங்கே வந்த காரணத்தை சொல்றேன். எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. கிராமத்து நிலத்தை விற்றுக் கிடைத்த பணத்தை நீவைத்திருப்பியே, கைமாற்றா வாங்கிட்டுப் போயிட்டு, ஒரு வாரத்திலே திருப்பிக் கொடுத்திடலாம்னு......"

 " எத்தனை பணம் தேவைப்படுது, மச்சான்?"

 " பத்து லட்சம்!"

 " ரெண்டு நாளிலே புரட்டி தரேன், சரியா?"

 " ஏன் சத்யா? நிலத்தை விற்ற பணம் உன்னிடம்தானே இருக்கு?"

 "அதுவா? என் நெருங்கிய நண்பனுக்கு கடன் கொடுத்திருக்கேன், எல்லா பணத்தையும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.