(Reading time: 13 - 26 minutes)
Couple

 நீங்க கேள்விப்பட்டபடி, தங்கராசு குடும்பத்தோட ஓடிப்போயிட்டான்னே வைச்சுப்போம், நான் அவனுக்கு கொடுத்த பணத்தை அவனிடமிருந்து மீட்க, ரெண்டு மூணு வருஷம் ஆகும்னும் வைச்சுப்போம்! உச்சக்கட்டமா, என் பணம் ஒரு காசுகூட திரும்பிவராதுன்னாலும், அதனாலே என் குடும்பம் முழுகியா போயிடும்?....."

 " சத்யா! என்ன பேசறே? ஒரு ரூபா, ரெண்டு ரூபா இல்லே, எண்பது லட்சம்!"

 " சரி, அந்த எண்பது லட்சம் எப்படி வந்தது? தரிசா கிடந்த நிலத்தை விற்று வந்தது, அதை விற்பதற்கு முன்பு நாங்க நிம்மதியா, சௌகரியமா வாழலையா? அதேபோல, தொடர்ந்து வாழ்வோம்...என்ன, புது வியாபாரம் தொடங்குவது தள்ளிப் போகும் சில காலம்!"

 " சத்யா! உண்மையாகவா சொல்றே? உன்னை இந்த இழப்பு பாதிக்கவேயில்லையா?"

 " பாதிக்கவே யில்லேன்னா சொன்னா, அது பொய்! ஆனா, அந்தப் பணத்தை மீட்க என்னென்ன செய்யணுமோ, அதை உடனடியா செய்வோம்! கிருத்திகாவும் பிள்ளைகளையும் தொடர்ந்து பழையபடி கவனிச்சிக்கிறேன்.

 மச்சான்! எனக்கு உள்ளுணர்வு சொல்லுது, கடவுள் எனக்கு நல்லதுதான் செய்வார்னு! நான் அவர்மீதோ, இல்லை, என்மீதேயோ வைத்திருக்கிற நம்பிக்கை பலமானதா இல்லையான்னு சோதிக்கிறார். பலமானதுதான்னு நிரூபிச்சுட்டா, வந்த பேரிழப்பு மாயமாய் மறைஞ்சுடும்......"

 " சத்யா! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது! நடைமுறையிலே வேதாந்தம் கை கொடுக்காது, காலை வாரிடும்........."

 அப்போது, சத்யாவின் கைபேசி ஒலித்தது.

 " சத்யா! தங்கராசு பேசறேன்......"

 " கொஞ்சம் இரு! ஸ்பீக்கரிலே போடறேன்..."

 கைபேசியை கைகளால் மூடிக்கொண்டு மச்சானிடம் யார் பேசுவது என்பதை தெரிவித்தார்.

 " சொல், தங்கராசு!"

 " நான் குடும்பத்தோட ஓடிப்போயிட்டதா, அங்கே வதந்தியாமே, எனக்கு கடன் கொடுத்தவர்கள் அதிர்ச்சியிலே உறைந்து போயிருக்காங்களாமே, நீ எப்படி?"

 " தங்கராசு! எனக்கு என்ன தோணுதுன்னா, உன் தொழில்முறை விரோதி மூர்த்திதான் உன் பேரைக் கெடுக்க, இந்த வதந்தியை பரப்பியிருப்பான்னு நினைக்கிறேன்......."

 " சத்யா! உன் பேருக்கேற்றமாதிரி, நீ நல்ல குணம் உள்ளவன். சரியாக கண்டுபிடிச்சுட்டே! இருந்தாலும், மற்றவங்க உன்னைமாதிரி இல்லாம, போலீஸிலே புகார் கொடுத்திருக்காங்க, அதனாலே நான் இப்பவே ஆன்லைனிலே எல்லோருடைய கடனையும் அடைக்க அவங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.