(Reading time: 13 - 26 minutes)
Couple

அதுதான்........"

 " அத்தனை பணத்தையுமா? எதை அடமானமா தந்திருக்கான்? எப்ப திருப்பித்தரேன்னு சொல்லியிருக்கான்?"

 " அவன் ஒரு பில்டர். நிலம் வாங்கிற, விற்கிற புரோக்கர்! அவன்தான் எனக்கு நிலத்தை விற்றுத் தந்தவன். அந்த பேரத்திலே, பத்து லட்சம் கூடவே வாங்கித் தந்ததினாலே, அவன்மீது எனக்கு நல்ல அபிப்பிராயம்......"

 " அதெல்லாம் சரி, இப்ப நீ கொடுத்த கடனுக்கு அவன் வீட்டை, வேற ஏதாவது சொத்துக்களை அடமானமா தந்திருக்கானா?"

 " மச்சான்! அவன் பெரிய பில்டர்! இந்த ஊரிலே நிறைய கட்டிடங்கள் அவன் கட்டியதுதான்! அவனிடத்தில் எப்பவும் பல லட்சம் புரளும், இப்ப அவனுக்கு பேங்கிலே ஒரு சிக்கல்! என் பணத்தை முழுவதும் பேங்கிலே செலுத்தினால், பத்தே நாட்களிலே ஒரு கோடி ரூபாய் கடன் தருவாங்களாம், அதை அப்படியே என்னிடம் கொடுத்திடறேன்னு சொன்னான்........"

 " சொன்னால், நம்புவதா? நீ ஒரு கிராமத்தான்னு சுலபமா ஏமாத்திட்டான்! அயோக்கியன்! அவன் பேரு தங்கராசுதானே?"

 " ஆமாம், மச்சான்! அவன் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்?"

 " சத்யா! இப்ப, அவன் பேரு இந்த ஊருக்கே தெரிந்து போயிடுத்து! உன்னைப்போல, இன்னும் பல பேரிடம் லட்சக்கணக்கிலே கடன் வாங்கிட்டு, அயோக்கியன் ராவோடு ராவா குடும்பத்தோட ஊரைவிட்டே ஓடிட்டான்.......ஊரிலே இப்ப அதுதான் பேச்சு!"

 " அப்படியா! இருக்காது, மச்சான்! அவன் அப்படிப்பட்டவன் இல்லே, நல்லவன்! உறவுக்காரங்க கல்யாணத்துக்காக குடும்பத்துடன் வெளியூர் போயிருப்பான்...தீர விசாரிப்போம். அவசரப்பட்டு, யாரைப் பற்றியும் தவறா பேசக்கூடாது......."

 " சத்யா! போதும், உன் முட்டாள்தனம்! தங்கராசுவைப் போல, மூர்த்தியும் ஒரு பில்டர்! எனக்கு ரொம்ப தெரிந்தவன்! பெரிய பணக்காரன். அவன்தான் என்னிடம் இதை சொல்லி, உடனே உன்னைப் பார்த்து போலீஸிலே புகார் கொடுக்கச் சொன்னான்....."

 " மச்சான்! தங்கராசுக்கு மெயின் ரோடில் ரெண்டு கோடி ரூபாய் பெறுமான பங்களா சொந்தமாயிருக்கு....."

 " சத்யா! வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறே! அந்த பங்களா ஏற்கெனவே மூணு பேரிடம் மூணு கோடி ரூபாய் கடனுக்கு அடமானமாயிருக்காம்......."

 " மச்சான்! தப்பா நினைக்காதீங்க! நீங்க ஏன் பதட்டமாயிருக்கீங்க? உணர்ச்சிவசப் படாதீங்க! பொறுமையா நான் சொல்வதை கேளுங்க!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.