(Reading time: 10 - 19 minutes)

காதலர் தின சிறப்பு சிறுகதை - இணைந்தது இதயம் மலர்ந்தது உறவு - ஜெப மலர்

பூங்காவின் மரத்தடியில் அமர்ந்திருந்த ராகினியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. யாரை இனி பார்க்க கூடாது என்று இரண்டு வருடத்திற்கு முன்பு புனே சென்றாளோ அவர்களையே இன்று பார்க்க பார்க்கில் காத்திருக்கிறாள்.

ராகவ்... அந்த பெயரை சொல்லும் போதே அவளுக்குள் ஒரு இன்ப அலைகள் பரவுவதை அவளால் தடுக்க இயலவில்லை.

இரண்டு வருடமாக அவனை மறக்க முயற்சி செய்து தோற்று போனாள். அவள் மனம் இரண்டு வருடத்திற்கு முன்னால் சென்றது.

ரண்டு வருடத்திற்கு முன்பு, 

 ராகினி, இந்த கோடிங் செக் பண்ணி சமிட் பண்ணிடுறியா...

 சரி, ராகவ்... வெளில போறியா

ஆமா ராகினி... ஸ்வேதா ஷாப்பிங் கூட்டிட்டு போனு ஒரே தொந்தரவு, அதான்... சீக்கிரம் வந்திடறேன்.

ஓகே ராகவ், பார்த்து போய்ட்டு வா.. 

ராகவ் வெளியேறியதும் ரோகினியின் மனதில் ஒரு கலக்கம் பிறந்தது. கண் மூடி பெருமூச்சை வெளியிட்டு தன் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சீக்கிரம் தன் காதலை ராகவ் விடம் சொல்லிவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவள் தன் வேலையோடு சேர்த்து ராகவ் வேலையை முடித்து விட்டு கிளம்பி வெளியே வந்தவளுக்காக ராகவ் காத்திருந்தான். 

ஹாய் ராகினி, நீ ப்ரீயா இருந்தா பார்க் போய்ட்டு போலாமா.. 

ம்ம்ம் போகலாம் என்றவளின் ஆழ்மனதில் ஒரு கலக்கம் தோன்றினாலும் ராகவ் உடன் பார்க் சென்றாள். 

ராகினி இதை உனக்காக வாங்கிட்டு வந்தேன் பிடிச்சிருக்கா

ஹேன்பேக்.. வாவ் சூப்பர் ரொம்ப பிடிச்சிருக்கு என்றவள் அதற்கு அப்புறம் அவன் சொல்ல போவது தன் மனதை உடைக்க போவதை அறியாமல் பேசிக் கொண்டே இருந்தாள். 

ராகவ்... நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதோ யோசனையில் இருக்க

ஆமா ராகினி.. நான் ஸ்வேதாவை காதலிக்கிறேன், ஆனால் அதை அவகிட்ட எப்படி சொல்ல என்று தெரியல. நீ ஏதாவது ஐடியா கொடேன். 

மிக ஈஸியாக சொல்லி விட்டு அவள் பதிலுக்கு காத்திருந்தான். ஆனால் அவளோ நெருப்பிலிட்ட புழுவாக துடிதுடித்து போனாள். அவள் மனம் ஆயிரம் கேள்விகள் கேட்க அவள் கண்கள் கலங்கியது. 

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது கலங்கிய விழிகளை கண்டதும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.