(Reading time: 10 - 19 minutes)

ராகினி என்னாச்சு என்றான். 

ஒன்னுமில்லை ராகவ் கொஞ்சம் தலைவலிக்கு என்று சொன்னதுமே அவளுக்கு தேநீர் வாங்கி கொடுத்து விட்டு அவளை விடுதியில் விட்டு விட்டு தன் இல்லத்திற்கு சென்றான். 

விடுதியில் படுக்கையில் விழுந்தவள் தலையணையை கட்டிக் கொண்டு அழுதாள். அழுது தீர்த்தவள் தன் காதலை இனி தனக்குள்ளே புதைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவள் அந்த இரவை உறங்காமல் கழித்தாள். 

அதை தொடர்ந்து வந்த நாட்கள் வேகமாக செல்ல ராகவை விட்டு தூரத்தில் இருந்தால் தான் அது தனக்கும் ராகவ்க்கும் நல்லது என்று முடிவு செய்தாள். தன் ஆபிஸ்ல புனே ப்ரன்ஞ்க்கு மாறுவது குறித்து பேசி விட்டாள். ராகவ் எவ்வளவு கூறியும் அவள் தனது முடிவை மாற்றிக் கொள்ளாதது ராகவிற்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. 

அவள் புனே செல்வதற்கு ஒரு வாரம் இருந்தது. அந்த ஒரு வாரமும் ராகினிக்கு தேவையானது எல்லாவற்றையும் ராகவ் பார்த்து கொண்டான். அதே நேரத்தில் அவனுக்கும் ஸ்வேதாக்குமான காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. 

ராகினி புனே செல்ல வேண்டிய நாளும் வந்தது. அவளை வழி அனுப்புவதற்காக ராகவ் ஸ்வேதா இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்த்த ராகினியின் மனதில் பொறாமையோ வன்மமோ ஏற்படவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து தீர்க்காயுசோடு சகல வளமும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை பிராத்தித்து விட்டு புனே நோக்கி பயணத்தை தொடங்கினாள். 

அது தான் ராகவை கடைசியாக பார்த்தது என்று மட்டும் கூற முடியாது, அவனிடம் கடைசியாக பேசியது கூட அன்று தான் என்று கூற வேண்டும். புனே சென்ற பின்பு ராகவ் பல முறை அவளை தொடர்பு கொண்டும் அவள் சூசகமாக தவிர்த்து விட்டாள். 

நாளடைவில் அவனும் தொடர்பு கொள்ளும் முயற்சியை நிறுத்தி விட்டான். 

இரண்டு வருடத்திற்கு பிறகு வேலையின் காரணமாக மீண்டும் சென்னைக்கு மாற்றி விட்டார்கள். அவனை பார்க்க வேண்டுமே என்ற கவலை ஒரு புறமும் அவனை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமும் இருக்க ஆபிஸ்க்குள் நுழைந்தவளின் முன்பு வந்து நின்றான் ராகவ். 

அழுவதா சிரிப்பதா என்று அவள் மனம் திகைக்க, அவள் கண்களை உற்று நோக்கியவன் சாயங்காலம் ஐந்து மணிக்கு நாம் கடைசியாக சந்தித்த பார்க்ல் காத்திரு ப்ளீஸ் என்றவன் அவளை விட்டு நகர்ந்து விட்டான். 

இருவரும் ஒரே ஆபிஸ்ல இருந்தாலும், அவள் தேடியும் அவனை பார்க்க முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.