ஸ்வேதா மேல கோபமாக வருது. நீ முகூர்த்தம் அன்றைக்கு போய் நாலு கேள்வி நறுக்கென்று கேட்டு இருக்கனும்.
ராகினி... அவள் காதலை அள்ளி தரும் போது சந்தோஷமா ஏற்றுக் கொண்டேன். அது போல அவள் வேண்டாம்னு விட்டு விட்டு போனதையும் ஏற்றுக் கொண்டேன். கஷ்டமாக தான் இருந்தது, அதற்காக காதலிச்சவளை கஷ்டப்படுத்த முடியுமா?
ஒரு தலை காதலுக்காக கொலை செய்ற இந்த காலத்தில் இப்படி நீ யோசிக்கிறதால தான் எல்லாம் விதத்திலும் நீ உயர்ந்தவனா தெரியற எனக்கு.
உண்மையான காதல் எப்போதும் தான் நேசிக்கிறவர்களை காயப்படுத்தாது. தன்னை வேணும்னா காயப்படுத்தி கொள்ளும், உன்னை போல
ராகவ் என்ன சொல்ற என்று அதிர்ந்து விட்டாள்.
அவளோட கல்யாணம் என்னை ரொம்ப பாதித்தது. நானும் புனே வந்திடலாம்னு யோசிச்சு உன்னை தொடர்பு கொள்ள ரொம்ப முயற்சி செய்தேன். நீ வேற என்னை அவாய்டு பண்ணினதும் எனக்கு என்ன பண்றதுனே தெரியல, நீ ஏன் பேசமாட்டேங்கறனு யோசிச்ச போது ஏதோ புரிகிற மாதிரி இருந்தது. புனே ப்ரண்ட்ஸ் கிட்ட உன்னை பற்றி விசாரித்தேன். நீ யாருக்கிட்டேயும் அதிகமா பேசுறது இல்லை என்று சொல்லி உன் ஃபோட்டா அனுப்பினாங்க, அதை பார்த்ததும் நிறைய புரிந்தது. உன்னோட மெயில் ஓபன் பண்ணி செக் பண்ணினா நீ என்னை நேசிச்ச உண்மையை தெரிந்து கொண்டேன்.
ராகவ்... அழுதே விட்டாள் ராகினி, அப்போ உண்மை தெரிந்ததும் வந்திருக்கலாம்ல.
காதல்ல தோற்று போய் உன்னை தேடி வர விரும்பலை, அதனால் பழைய நாட்களை அழித்து போட சில காலங்களை எடுத்து கொண்டேன். எனக்காக தன்னை வருத்திக் கொள்பவளை வருத்தம் இல்லாமல் வாழ வைக்க பொருளாதாரத்தை உயர்த்தி கொண்டேன்.
எந்த இடம் உனக்கு கஷ்டத்தை கொடுத்ததோ அதே இடம் உனக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கட்டும் என்று சொல்லி உன்னையும் இங்க மாறுதல் பெற்று வர செய்தேன். இப்போது உன்னுடைய விருப்பத்தை எதிர் பார்த்து இருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா?
அவளது கண்கள் ஆனந்த கண்ணீரை பொழிந்தது. உரிமையாய் தோளில் சாய்ந்து கொண்டு கைகளை தன் கைகளோடு கோர்த்து கொண்டாள். சிறு வயதில் இருந்து பழகிய தோழனாய் இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தொட்டு பேசியதில்லை, எனவே இந்த முதல் தொடுதல் உயிர் வரை ஊடுருவியது.
அவளது செய்கையே அவள் சம்மதத்தை உணர்த்த தன் ஒரு கையால் அவளை அணைத்து கொண்டு, மறு கையில் மொபைல் எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சொன்னான்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.