(Reading time: 10 - 19 minutes)

ஆயிரம் வித்தியாசம் சொல்லும் அளவு மாறி இருந்தாள். 

ஒல்லியான தேகம் சதைகளால் அழகாக மெருகேறி இருந்தது. கண்களுக்கு மை தீட்டி புருவங்களை திருத்தி தலை முடியை மார்டனாக கட் செய்து... சொல்லி கொண்டே போகலாம் போல அநேக மாற்றங்கள் அவளிடம். 

அழகா இருக்கா, ஆனால் பல மாற்றங்கள். 

சரி இப்போ அம்மா வீட்ல தான் இருக்காளா, அவளை நல்லா பார்த்து கொள் என்று பேசி கொண்டே போனவளிடம்

ராகினி கல்யாண போட்டா பார்க்கலையா

இல்லை எடுத்து கொடு ராகவ்

தொடர்ந்து பாரு

சரி என்றவள் இரண்டு போட்டா நகர்த்தியதும் திருமணம் அன்று எடுத்த புகைப்படம் அழகாக காட்சி தந்தது. 

அதை பார்த்தவளின் கண்களில் நீர் வழிந்தது. எவ்வளவு முயற்சித்தும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஸ்வேதாவின் பக்கத்தில் மற்றொருவன் மணமகனாய் நிறுத்தப்பட்டிருந்தான். 

அப்போது தான் ராகவை நன்றாக பார்த்தாள். அவன் இயல்பாக இருப்பதை பார்த்ததும் ஏன் என்னாச்சு என்றாள். 

நீ இங்கே இருந்து போன ஒரு மாதத்தில் எங்க காதல் அவர்கள் வீட்டுக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். நானும் பேசி பார்த்தேன். அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வாரத்தில் அவள் வேலைக்கு வரவில்லை. தொடர்பு கொள்ள எவ்வளவு முயற்சி செய்தும் அவளிடம் பேச முடியவில்லை. 

ஒரு மாதத்தில் அவளது திருமண பத்திரிக்கை தான் என்னை தொடர்பு கொண்டது. ஆபிஸ்ல எல்லாரும் திருமணத்திற்கு போனார்கள். நான் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. இந்த போட்டோஸ் ஆபிஸ் ஸ்டாப் அனுப்பினாங்க. அழிச்சிடலாம்னு நினைத்தேன். ஆனால் அழிக்கவில்லை. உங்கிட்ட காட்டுவதற்காக வைத்திருந்தேன் என்றவன் அவளிடமிருந்து மொபைலை வாங்கி அழித்து விட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தான். 

அவளால் அவனது முகத்தை பார்க்க முடியவில்லை. நண்பனாக எனக்கு எத்தனையோ உதவி செய்திருக்கிறான். தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் ஊற்றுகோலாய் தாங்கி இருக்கிறான். ஆனால் அவனுக்கு என் ஆறுதல் தேவைப்பட்ட போது நான் தலைமறைவாகி விட்டேனே என்று நொந்து கொண்டாள். 

சாரி ராகவ், இவ்வளவு நடந்திருக்கிறது, ஆனால் நான்.... பேச முடியாமல் நாக்கு குழறியது. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.