" உண்மைதான், நித்தி! அந்த பாதி துணிவிலே என்னென்ன செய்தீங்க?"
" நான் ஒண்ணும் பெரிசா செய்யலைங்க! எங்க காலேஜ் மாணவர் சங்கத்துக்கு நான்தான் தலைவன்! சமூக விரோதிகளை கண்டித்து அப்பப்போ கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து சமூக விரோதிகள்மீது நடவடிக்கை எடுக்கவைப்போம்......."
" நல்ல காரியம்தானே! இதற்கா அப்பா, அம்மா பயப்படறாங்க?"
" நித்தி! அந்த ரௌடிங்க விஷயத்தை சொல்லுடா!"
" அதுவா? இந்த நகரத்திலே சில பகுதிகளிலே படிக்காத இளைஞர்களையும் வேலை கிடைக்காத வாலிபர்களையும் வளைத்துப்போட்டு, ரௌடி கும்பல்கள் பணக்காரங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அடாவடித்தனம் தைரியமா செய்கிறாங்க, அதற்கு காவல்துறையிலே சிலரும் மறைமுகமா ஆதரவு!
நீங்க தினமும் ஊடகங்களிலே செய்தி படித்திருப்பீங்களே, இளம்பெண்களை கடத்திக்கொண்டு எங்காவது மறைவிடமா போய், அவங்களை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்து, பயமுறுத்தி, பணக்காரங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆசைநாயகியாக்கி கொடுமைப்படுத்தறாங்க, இது எவ்வளவு பெரிய கொடுமை! மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள், சமூகசேவை மன்றங்கள் எத்தனையோ எதிர்த்தும் இவை இன்னமும் நடந்துகொண்டே இருப்பதற்கு என்ன காரணம்னு நாங்க மாணவர்கள் யோசித்தோம்.
அந்த ரௌடிகளுக்கு பின்பலமாக இருக்கிற பணக்காரங்களும், அதிகாரிகளும், காவல்துறையிலுள்ள கருப்பாடுகளும்தான் மூலகாரணம்னு முடிவு எடுத்து, மாணவர்படை மூலமா துப்பு கண்டுபிடித்து காவல்துறைக்கு தெரிவித்து இதுவரையில் நாலைந்து பேரை கைது செய்ய வைத்திருக்கிறோம்.
இதிலே, அந்த கிரிமினல்கள் எப்படி தப்பிக்கிறாங்கன்னா, ஜாமீன்லே வெளியிலே வந்து சாட்சிகளை பணம் கொடுத்து கலைத்து வழக்கை உடைத்து தப்பிச்சிடறாங்க,
நீதிமன்றங்களும் வழக்குகளை விரைவில் முடிக்காமல் வருஷக்கணக்கிலே இழுத்தடித்து நீர்த்துப்போக வைக்கின்றன.
அதனாலே, சட்டத் திருத்தங்களுக்காகவும் போராட்டம் நடத்துகிறோம்,
மாணவர்களை, குறிப்பாக என்னையும் இன்னும் சிலபேரையும், தீர்த்துக்கட்ட ரௌடிக் கும்பல்கள் தயாராகி வருவதாக காவல்துறை எங்களை எச்சரித்துள்ளது.
அதனாலேதான், அப்பாவும் அம்மாவும் என்னை நினைத்து நினைத்து கவலைப்படறாங்க......
இப்படி எல்லாரும் உயிருக்குப் பயந்து, பின்வாங்கினால், இந்தநாட்டில் பெண்கள் எப்போது,