(Reading time: 10 - 20 minutes)

நீங்கதானே, நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சுன்னு புலம்பினீங்க!"

 " அதுவா? என் பிள்ளை ரொம்ப நல்லவனா இருக்கிறான், இந்த பொல்லாத சமுதாயம் அவனை சும்மா விடாதேன்னு கவலைப்படறோம்......."

 " அப்படி சொல்லும்மா! இத பாருங்க, நான் ஒரு பாரதி பக்தன்! உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அவன் எழுதின பாட்டு:

 

'தேடிச்சோறு நிதந்தின்று, பல

சின்னஞ்சிறுகதைகள்பேசிபிறர்

வாடித் துன்பம் மிக உழன்று பிறர்

வாடப் பல சிறிய செயல்கள் செய்து-நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடும்

கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்-பல

வேடிக்கை மனிதரைப்போலே-நானும்

வீழ்வேன் என்று நினைத்தாயோ!'

 என் உள்ளமும் உடலும் பாரதியின் பாக்களால் வீறுகொண்டு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், கூடுதலாக, எனக்கு முன்பே, என்னைப் பெற்ற தாய், பாரதியின் புதுமைப்பெண்ணாக வாழ்ந்து எனக்கு அந்த வீரத்தை தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டிவிட்டாங்களே, நான் எப்படி அதிலிருந்து வெளிவர முடியும்?"

 " அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து, என்னை குழப்பறீங்களே தவிர, இன்னமும் விஷயத்துக்கு வரமாட்டேங்கிறீங்களே....."

 " இதப் பாருங்க, இந்த கதை கேட்கிற புத்தியை விட்டு, இந்த நாட்டில் வாழ்கிற ஒரு பொறுப்புள்ள குடிமகனா யிருங்க!"

 " அப்படி இருப்பதனால்தானே, என் வேலையை விட்டுவிட்டு, உங்களிடம் பேசுகிறேன், நித்தி! நீ ஆயிரம் சொன்னாலும், உன்னாலே உன்னைப் பெற்றவங்க, நிம்மதியில்லாமல் தவிக்கிறாங்க என்பது உண்மைதானே!"

 " நீங்க ஒரு விஷயத்தை முக்கியமா தெரிஞ்சிக்கணும்! அவங்க நிம்மதி இழந்து தவிக்க காரணம், இந்தப் புரையோடிய சமுதாயம் என் வேகத்தையும், நான் திரட்டியுள்ள கல்லூரி மாணவர் படையையும் கண்டு ஆளும் கட்சி, பிற்போக்காளர்கள், ரவுடிக்கும்பல் எல்லோரும் பயப்படறாங்க, அதிலும் தேர்தல் சமயமாயிருக்கிறதனாலே, பயம் கிலியாகிவிட்டது.......அப்பா, அம்மாவுக்கு பயம் என்னன்னா, அவங்க கொலைக்கும் அஞ்சமாட்டாங்களே, என் உயிருக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.