(Reading time: 7 - 14 minutes)

 

 " வள்ளி! பார்த்தியா? இதுக்குத்தான் நான் பயந்தேன். இப்ப என்ன செய்வது?"

 

 " நம்ம ஓனர் ரொம்ப நல்லவருங்க! அவரை தனியா கூப்பிட்டு நம்ம நிலமையை சொல்லுங்க!"

 

 அதை கேட்டுக்கொண்டே, ஓனர் உள்ளே நுழைந்தார்.

 

 " மாரிசாமி! வாடகையை அதிகரிக்காமல் இருக்க, ஒரு வழியிருக்கு! அதை எப்படியாவது செய்தேன்னா, நீ இதே வாடகையிலே எத்தனை வருஷம் வேண்டுமானாலும், இந்த வீட்டிலே இருக்கலாம்."

 

 " சொல்லுங்கய்யா!"

 

 " நான் தரவேண்டிய பத்து லட்ச ரூபாயை நீ சங்கத்திலே கட்டிடு, அந்தப் பணத்தை நான் உனக்கு, நீ எப்ப வீட்டை காலி பண்றியோ, அப்ப உனக்கு திருப்பி தந்துடறேன், யோசித்து முடிவு எடு!"

 

 "ரொம்ப சந்தோஷங்க! முயற்சி பண்றேன்......"

 

 " யாராவது ஏதாவது சொல்லி, தடுக்கப் பார்ப்பாங்க! நீ எத்தனை வருஷம் வேணுன்னாலும், தொடர்ந்து இருக்கலாம்னு நான் சொன்னதை மறந்துடாதே!"

 

 " புரியுதுங்க, ஐயா!"

 

 " எத்தனை வருஷம் வேணும்னாலும் , இதே வாடகையிலே இருக்கலாங்கிறதை மறந்துடாதே! நீ இப்பவே காலி பண்ணினா, எனக்கொண்ணும் நஷ்டமில்லே, வாடகையை இரட்டிப்பாக்கி கறந்துடுவேன், நீ நான்னு போட்டி போட்டுண்டு வருவாங்க, இந்த இடத்துக்கு! ஏன்னா, இந்த இடம் ஷஹர்! பஸ், ரயில், கடைத்தெரு, கோவில், பள்ளிக்கூடம், காலேஜ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.