(Reading time: 7 - 14 minutes)

 " இருபது அபார்ட்மெண்ட்ஸ் உள்ளதே ஒழிய, பத்து கார்கள் பார்க் பண்ணத்தான் இடம் இருக்கிறது. குடியிருப்பவர்களுக்கிடையே,இதனால், தினமும் சண்டை உண்டாகிறது. இதற்கொரு தீர்வு காணவேண்டும், உடனடியாக!"

 

 செயலாளர் விளக்கினார்.

 

 " இருபது ஆண்டுகளுக்குமுன், நாம் குடி ஏறியபோது, ஐந்து ஓனர்களிடம்தான் கார் இருந்தது, மற்றவர்கள் டூவீலர்தான் வைத்திருந்தார்கள். காலப்போக்கில், இப்போது பதினைந்து பேரிடம் கார் உள்ளதால், இந்த இட நெருக்கடி உள்ளது. இதனால், எப்போதும் ஐந்து கார்கள் இரவில் கேட்டுக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன. உங்களுக்குத் தெரியும், தெருவில் நிறுத்திவைப்பதில் உள்ள பிரச்னைகள்! இதற்கு ஒரே வழி, தெற்குப்புற சுவரை ஒட்டி காலிமனை உள்ளது, அதை விலைக்கு வாங்கினால், பிரச்னை நிரந்தரமாக தீரும். அதற்கு தேவை, பத்து லட்ச ரூபாய்!"

 

 இறுதியாக, முடிவானது:

 

" ஒவ்வொரு ஓனரிடமிருந்தும் பத்து லட்ச ரூபாய் உடனடியாக வசூலிப்பது!"

 

 எல்லா குடியிருப்போருக்கும், மிகுந்த மகிழ்ச்சி! தங்கள் குறைகள் யாவும் தீர்க்கப்படுமென!

 

 அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை!

 

 வாடகைக்கு வசிப்போரிடம் ஓனர்கள் கறாராகப்பேசினர்.

 

 " பத்து லட்ச ரூபாய் உடனடியாக உங்கள் வசதிகளை பெருக்குவதற்காக தரப்போகிறோம், அதனால் வாடகையை கணிசமாக உயர்த்தவேண்டியிருக்கு, அதுவும் உடனடியாக! உங்களை கட்டாயப்படுத்தவில்லை. முடியாதவர்கள், இந்த மாதக் கடைசியில் வீட்டை காலி செய்துவிடுங்கள்! அது போதும்......"

 

 குதூகலித்த வாடகைக்கு வசிப்போர், முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு விழித்தனர்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.