(Reading time: 7 - 14 minutes)

எல்லாம் அருகாமையிலே இருக்கு! வர்றவங்க எப்படியும் கார் உள்ளவங்களா வருவாங்க! பார்க்கிங் ஸ்பேஸ் இருக்கில்லே!"

 

 இதைவிட, இனிப்பா பேசமுடியுமா?

 

 மாரிசாமியும் வள்ளியும் யோசித்தனர்.

 

 " இத பாரு, வள்ளி! நம்ம பிள்ளைங்க படிப்புக்கு, இந்த இடம்தான், வசதி! தவிர, எனக்கும் ஆபீஸ் நடந்துபோகிற தூரம்! நீ நடந்தே போய், எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து, தாம்பரத்திலே நீ வேலை பார்க்கிற இடத்துக்கு போய் வரலாம். இங்கிருந்து, வேற இடத்துக்கு வீடு பார்த்து போகலாம்னா, பத்து வருஷமா கொடுக்கிற இந்த வாடகைக்கு, ஶ்ரீபெரும்புதூரிலே கிடைக்கும். அங்கிருந்து நாம எல்லாரும் வந்துபோகிற செலவை கூட்டிப்பார்த்தால், ஓனர் சொல்வதை ஒத்துக்கிறதை தவிர, வேற வழியில்லே.........."

 

 " நீங்க சொல்வது சரிங்க! ஆனா, இப்ப பத்து லட்ச ரூபாய்க்கு என்ன செய்வது? கடன் வாங்கினால், அதுக்கு மாசம் கட்டவேண்டிய வட்டி பத்தாயிரம் ஆகுமே!"

 

 " யோசிப்போம், வள்ளி!"

 

 நகரில் வாழ்கிற நடுத்தர வர்க்க மக்களின் நிலை இதுதான்! ஒவ்வொரு நாளும் புதுப் புது பிரச்னை!

 

காலேஜ், பள்ளிக்கூட செலவுகளிலே எதையாவது குறைக்கமுடியுமா? சாப்பாட்டுச் செலவை குறைக்க முடியுமா? சொந்த ஊரிலே சொந்தம்னு சொல்லிக்க வீடோ, நிலமோ இருக்கா? பெயருக்குத்தான் சொந்த ஊர்!

 

 சரி, நகைநட்டு இருக்கா, அடகுவைக்க? கழுத்திலே தொங்கும் தாலியை தவிர, மற்ற நகைகள் எல்லாம் டூப்ளிகேட்!

 

 " ஏங்க! உங்க ஆபீஸிலே லோன் கிடைக்குமா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.