(Reading time: 7 - 14 minutes)

 

 " எதை நாம விட்டுவைத்தோம்? பி.எஃப், சொஸைடி, எல்லாம் வாங்கி மாசாமாசம் வட்டியை சம்பளத்திலே பிடிக்கிறதனால்தானே, நாலு டிஜிட் சம்பளம், மூணு டிஜிட்டாயிடுது!"

 

 "வீட்டு வேலையை ஆள் போடாம நானே செய்யறேன், ஒரு சினிமா, டிராமா, போவதில்லை, வெளியூர் போய் வருஷக் கணக்காயிடுத்து! இருக்கிற நாலு சேலைகளை மாற்றி மாற்றி கட்டிக்கிறேன், வீட்டிலே ஒரு வாஷிங் மெஷின், ஒரு டி.வி., ஒரு சைக்கிள், உண்டா? ரெண்டு வேளை சாப்பாட்டை தவிர, டிபன், காபி உண்டா? இதுக்கும் மேலே சிக்கனமா எப்படிங்க வாழமுடியும்?"

 

 வீட்டுக்கு வீடு இதே கதைதான்! ஆனால், நகைக்கடை, ஓட்டல், ஜவுளிக்கடை, சினிமா ரயில், பஸ், பீச் எங்கே பார்த்தாலும் மிடில் கிளாஸ் மக்கள் கூட்டம்தான்! அதெப்படி?

 

 பணம் தாராளமாக புழக்கத்தில் உள்ளது, ஆனால் நெருக்கடியின்போதுதான் கிடைப்பதில்லை!

 

 நடுராத்திரி வள்ளி, கணவனை எழுப்பினாள்.

 

 " ஒரு யோசனைங்க! நம்மைப்போல உள்ளவங்களுக்கு நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழி, உடலுறுப்பு தானம்!

 

பெயரிலேதான், தானம்! ஆனா, ஒவ்வொரு உறுப்புக்கும் லட்சக்கணக்கிலே பணம் கிடைக்குமாம் சுலபமா! 

 

 நமக்கும் உடல் உபாதை எதுவும் இல்லாம, கிட்னியை பணம் வாங்கிண்டு தரலாம். ஆண்டவன், நம்மைப் போல ஏழைங்களுக்காகவே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு கிட்னி எக்ஸ்டிராவா கொடுத்திருக்கான், மனிதர்களால் உதவி செய்ய முடியாதபோது, மகேசன் உதவிக்கு ஓடிவரான், பார்த்தீங்களா?"

 

 " ரொம்ப கரெக்ட், வள்ளி! இந்த யோசனையை உனக்கு தூங்கும்போது கொடுத்ததும் அதே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.