(Reading time: 9 - 17 minutes)

நடந்துகொண்டிருப்பதைக் கேட்டு, வாயிலிலேயே நின்று காது கொடுத்தார்.

 " இத பாருங்க, கதிரவன் கேட்கிறதை, எங்க அண்ணனின் சொத்துக்களில் பாதியை உங்க பெயரில் சீதனமாக மாற்றவேண்டுமென நான் என் அண்ணனிடம் ஒருநாளும் கேட்கமாட்டேன். இன்று என் அண்ணன் வந்ததும், அவரிடம் இதை சொல்லி, வேற மாப்பிள்ளை தேடச் சொல்லிடறேன், பாவம்! அண்ணன் அதிர்ச்சியிலே உறைந்து போயிடுவார்....."

 " கரெக்ட்! மல்லிகாவுக்கு வேற நல்ல மணமகன் கிடைப்பான், நம்ம கதிரவனுக்கும் வேற நல்ல மணமகள் கிடைப்பாள்....."

 " அவருடைய ஆசை, கனவு எல்லாம் நம்ம ரெண்டு குடும்பங்களும் நெடுங்காலத்துக்கு இணைந்து இருக்கணுங்கிறது, அது நிறைவேறாது.........."

 அண்ணாமலை, தொண்டையை கனைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

 தம்பதிகள் சுதாரித்துக்கொண்டு அண்ணாமலையை சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

 " தங்கச்சி! இன்னிக்காவது இந்த அண்ணனுக்கு நல்ல முடிவு சொல்லுவியா? என்னாலே இதுக்கு மேலே காத்திருக்க முடியாது........"

 கதிரவனின் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.

 " செண்பகம் என்னிடம் சொல்லி அனுப்பியிருக்கா, அவங்க நல்ல முடிவு சொல்கிறவரையில் நீங்க அங்கேயே தர்ணா பண்ணுங்கன்னு!"

 அண்ணாமலை வாய்விட்டு சிரித்தார்.

 அவருடைய தங்கையோ அவள் கணவனோ விழித்தனர்.

 " தங்கச்சி! நம்ம ரெண்டு பேரையும் பெற்ற தாய், அவள் இறக்கும்போது, என்னிடம் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டபிறகுதான் கண்களை மூடினாள்......."

 " அப்படியா! சொல்லவே இல்லையே, இத்தனை வருஷம்!"

 " காலம் கனியட்டும்னு காத்திருந்தேன்......."

 " அண்ணே! இதே வார்த்தையை, 'காலம் கனியட்டும்' என்பதைத்தான், கதிரவனும் சொல்லி முடிவை தள்ளிப்போடறான்...."

 " அதை விடு! என்ன சத்தியம்னா, என் சொத்துக்களில் சரிபாதியை உன் புருஷனுக்கு எழுதி வைக்கணுங்கறதுதான் அந்த சத்தியம். அது நான் உனக்கு கொடுக்கிற சீதனமாம்!"

 தங்கை ஓடிவந்து அண்ணனை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

 " அண்ணே! அதெல்லாம் வேண்டாங்க! அது தப்புங்க! கல்யாணமாகி இருபத்தெட்டு வருஷம் கழித்து சீதனம், அது இதுன்னு.........."

 " தங்கச்சி! ஏன் பிரிச்சிப் பார்க்கிறே? அது பிறகு, கதிரவனுக்குத்தானே வரப்போகுது......." என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.