(Reading time: 9 - 18 minutes)

 அப்படி செய்யக்கூடியவர்கள்தானே, புரட்சிக்காரன்கள்!

 முனுசாமியும் லெனினும் பள்ளித் தோழர்கள்! அப்போதிருந்தே, முனுசாமி லெனினின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதும், அதேபோல லெனின் முனுசாமி வீட்டுக்கு வந்துபோவதும் உண்டு.

 பிறகு, ஓரிரண்டு ஆண்டுகள், ஒரு பொதுநல மன்றத்தில் இருவரும் தீவிரமாகப் பணியாற்றினர்.

அதன் தொடர்ச்சியாக, லெனின் சில ஆண்டுகள் இடதுசாரி கட்சிகளில் பணியாற்றினான்.

 பிறகு, அங்கிருந்து விலகி, புரட்சிக்காரனாக தனக்கென ஒரு வழி வகுத்துக்கொண்டு, சில தோழர்களுடன் பணியாற்றி வருகிறான்.

 முனுசாமி பொதுநல மன்றத்திலிருந்து விலகியபின், வங்கி ஒன்றில் பியூனாக வேலையில் சேர்ந்தான்.

 தாய்க்கு அவனைத்தவிர, வேறு நாதியில்லை. அவன் வருமானத்தில்தான், இருவரும் காலந் தள்ளுகின்றனர்.

 அவ்வப்போது, லெனின் முனுசாமியை பார்க்க வருவதும் அதேபோல, முனுசாமி லெனின் வீட்டுக்குப் போவதும் உண்டு.

 ஆனால், நல்ல நண்பர்களாக பழகினார்களே தவிர, ஒருவருடைய பாதையில் மற்றவர் குறுக்கிடுவதோ, அபிப்பிராயம் சொல்வதோ, ஒருநாளும் கிடையாது.

 இந்த விஷயங்கள் அரையும் குறையுமாக போலீஸுக்கு தெரிய வந்ததினால், முனுசாமியைத் தேடிவந்து அழைத்துச் சென்றனர்.

 இருவருக்கும் இடையே இருந்த நட்பை சொன்னவர்கள், லெனினின் புரட்சிக் குழுவுக்கும் முனுசாமிக்கும் தொடர்பில்லை என்பதை தெரிவிக்கவில்லை!

 அதனால், போலீஸ் முனுசாமியை அழைத்துச் சென்றதும், நியாயம்! முனுசாமியின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததும், அவளை காப்பாற்ற மகன் முனுசாமி அவசரமாக டாக்டரை தேடிச் சென்றதும் உண்மை, நியாயம்!

 இரு நியாயங்கள் மோதிக்கொண்டதில், ஒரு உயிர் பலியானது அநியாயம்! உண்மையா, இல்லையா?

 இதை பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பானா, புரட்சிக் குழுத் தலைவன், லெனின்!

 விசாரணை எனும் பெயரில், முனுசாமியை காவலில் வைத்திருந்த போலீஸிடம் முனுசாமி காலில் விழுந்தான், கெஞ்சினான், கதறினான்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.