(Reading time: 9 - 18 minutes)

 முதியவர் மிதிபட்டு இறந்தது, கூடவந்திருந்த கும்பல் கலவரத்தில் ஓடியபோது, ஏற்பட்ட ஒரு விபத்து!

 இதற்கும் காவல்துறை அதிகாரிக்கும் எந்த நேரடி தொடர்புமில்லை!

 அவர் பயப்படவேண்டிய அவசியமே இல்லை! மனிதாபிமானத்துடன், முதியவரை மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்று வைத்தியம் செய்ய, உத்தரவிட்டிருக்கலாம்! அதுதானே நியாயம்?

 தேவையற்ற பதட்டத்தினால், தகாத செயல்களில் ஈடுபடுவானேன்? தன்கீழ் ஊழியம் செய்பவர்களையும் குற்றம் செய்ய உத்தரவிடுவானேன்?

 இது நியாயமா?

 " ஒருதலைப் படசமாக, நியாயத்தை தீர்மானிக்க முடியுமா? என் பக்கத்து நியாயத்தையும் கேளுங்கள்"

என்றார் அதிகாரி!

 " நீங்கள் சொல்வதும் சரியே, சொல்லுங்கள்!"

 " போலீஸ் இலாகாவிலுள்ள வேலைச்சுமையைப் போல, வேறெந்த இலாகாவிலும் இல்லை! நாங்கள் வீட்டுக்கே போக முடிவதில்லை!

 எங்களுக்கு உங்கமாதிரி, வேலைநேரம் என்று, 10லிருந்து 5வரை என்றோ, 8லிருந்து 4வரை என்றோ, டே ஷிப்ட், நைட் ஷிப்ட் என்றோ எதுவும் கிடையாது. சொல்லப்போனால், ராணுவத்தில்கூட, போர் நடக்கும்போது மட்டுமே 24 மணி நேர டியூடி! எங்களுக்கோ வருஷம் 365 நாளும் டியூடி! லா&ஆர்டர், க்ரைம், பந்தோபஸ்து, வி.ஐ.பி.விசிட், எல்லாவிதமான வேலைகளும் செய்தாகணும். போனிலே எப்போ, யார் கூப்பிட்டு, என்ன சொல்லப்போகிறார்களோ என்று பயந்துகொண்டே இருக்கிறோம்.

 லோகல் எம்.எல்.ஏ., வட்டார எம்.பி., மாவட்ட அமைச்சர்னு அவங்க வேறே தனிப்பட்ட வேலைகளை செய்யச் சொல்வாங்க!

 சாப்பிட வீட்டுக்குப் போனா, பெண்டாட்டியிடம் பேசக்கூட 'மூட்' இருக்காது! அதனாலே, அவள் நியாயமா கேட்பாள்,

"ஏங்க! உங்களைமாதிரி போலீஸ்வேலை செய்றவங்கள்ளாம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிறீங்க? பிள்ளைங்கிற பெத்துக்கிறீங்க? வேலைதான் உங்க பெண்டாட்டி! போலீஸ்காரன்கள்தான் பிள்ளைங்க! இனிமே, சாப்பாட்டுக்குக்கூட வீட்டுக்கு வராதீங்க, நான் ஸ்டேஷனுக்கே கொடுத்து அனுப்பிடறேன்......"

 இப்ப சொல்லுங்க! எங்களை தெளிவா நிதானமா யோசிக்க விடாம, நாலுபக்கமும் பிடுங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.