(Reading time: 8 - 16 minutes)

சிறுகதை - உன்னைவிட உயர்ந்தவன்! - ரவை

ந்த மாத முதல் சனிக்கிழமை!

சிறுவன் கண்ணனை கொஞ்சி மகிழ, கதிரவன் வரும் நாள்!

 காலையில் எழுந்ததுமே, கௌதமி தன் சிநேகிதி வீட்டுக்கு சென்றுவிட்டாள்!

 இரவு எட்டு மணிக்குமேல் தான் திரும்புவாள்!

 அவள் திரும்பி வீட்டுக்குள் நுழையும்போது, கதிரவன் அங்கிருக்கக் கூடாது!

 ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையன்று, அந்த வீட்டில் நடப்பது, இதுதான்!

 ஏதாவது காரணம் காட்டி, கதிரவன் இரவு எட்டு மணிக்கு மேல், அந்த வீட்டில் இருந்தால், அதுவே அவன் குழந்தை கண்ணனுடன் கொஞ்சி மகிழும் கடைசி நாளாகிவிடும்!

 இதுதான் கௌதமிக்கும் கதிரவனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம்!

 சிறுவன் கண்ணனுக்கு, கதிரவனைப் பார்த்தாலே குதூகலம்! கதிரவனும் தன் வயதை மறந்து கண்ணனுடன் விளையாடி மகிழ்வான்.

 இரவு எட்டு மணிக்கு, கதிரவன் வீட்டைவிட்டு வெளியேறும்போது, கண்ணன் முகம் தொங்கிப்போகும், கண்களில் சோகம் மிதக்கும்!

 கதிரவனும் பிரிய மனமின்றித்தான் வெளியேறுவான். அவன் கண்களிலும் நீர் தளும்பும்.

 இந்தக் காட்சியை தவறாமல் காண்கிற கௌதமியின் பெற்றோரும் சோகத்தில் மூழ்குவர்.

 " இறைவா! இதற்கு ஒரு நல்ல முடிவை சீக்கிரமே அருளக்கூடாதா? தந்தையையும் மகனையும் பிரிப்பது மகா பாபம் இல்லையா? இமாலயக் கொடுமையாக, கதிரவனை தந்தையென, மகனுக்கு ஒருநாளும் கதிரவனின் மூலமாகவோ கௌதமியின் மூலமாகவோ, அவளுடைய பெற்றோரின் மூலமாகவோ தெரியக்கூடாது என மகள் கௌதமி உறுதியாக இருப்பதே!

 கௌதமி தன் முரட்டுப் போக்கை கைவிடமாட்டாளா? அப்படியென்ன உலகத்திலே எவருமே செய்யாத குற்றம் செய்துவிட்டான், கதிரவன்?

 வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணியாற்றுகையில், அவனுடைய மேலதிகாரிக்கு, ஒரு பண மோசடி விவகாரத்தில், உடந்தையாக இருந்தான், அவ்வளவுதான்!

 நல்லவேளையாக மேலதிகாரியை வேலையிலிருந்து நீக்கிய வங்கி, கதிரவன் இந்த ஊழலில் மேலதிகாரியை காட்டிக் கொடுக்காமல் இருந்தான் என்கிற பிழையைத் தவிர, அவன் எந்த பொருளாதாரப் பயனையும் அடையவில்லை என்பதை கணக்கில் எடுத்து, அவனுக்கு பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளுக்கு கிடையாது என்று தண்டித்ததோடு வங்கி அவனை விடுவித்தது.

 கௌதமியை சூடேற்றியது, இந்த ஊடகங்களே!

 இந்த விவகாரம் வெளியே தெரிந்த முதல் நாளிலிருந்து, விசாரணை நடந்த ஆறு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.