(Reading time: 10 - 19 minutes)

பதில் ஏதும் தரவில்லை!

 பொறுமை இழந்து, அம்மா விமலாவிடம் தனியாக விசாரித்தாள்.

" ஏம்மா! ஏதாவது நல்ல முடிவு எடுத்துட்டீங்களா?"

 " இதற்கு பதிலை நான் சொல்றேம்மா, ரெண்டுபேரும் இங்கே வாங்க...." வரதன் அழைத்தான்.

  " நீங்க ரெண்டு பேருமே என்னை வளர்த்து ஆளாக்கினவங்க! உங்கள் வார்த்தைக்கு நாங்க மதிப்பு கொடுக்க வேண்டியது எங்க கடமை!

 மதிப்பு தந்து யோசனை செய்தோம்.

 நாங்க நிகழ்காலத்திலே வாழ்வதையே விரும்புகிறோம்

 எதிர்காலத்திலே, எங்க முதுமையிலே, என்ன ஆகும்னு இப்பவே கவலைப் படுவது, திட்டமிடுவது, அவசியம் இல்லைனு நினைக்கிறோம்!

  இப்ப எங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்கிற குறையே இல்லாம, நிம்மதியாக இருக்கோம்!

 இரண்டாவது, எங்கள் நம்பிக்கை, கடவுள் எங்களுக்கு எது எப்போது தேவையோ, அதை அப்போது கட்டாயம் தருவான் என உறுதியா நம்பறோம்!

மூணாவது, டாக்டரை இப்ப பார்த்து அவர் சொல்ற சிகிச்சையை செய்துகொள்ள நாங்க இன்னும் பக்குவப்படலே.......

நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்! தினமும் குழந்தை களுடன் பழகுகிறேன், அதே போல, விமலாவும் என்னை தன் குழந்தையைப்போல நேசிக்கிறா.....

  இந்த பள்ளிக்கூட ஆசிரியருடைய வருமானத்திலே, சொத்து சேர்க்கிற வாய்ப்பே இல்லை, வாரிசு தேட.......

எங்களுடைய தேவை ஏதாவது இருந்தால், அதை கடவுள் தீர்த்துவைப்பார் என நம்புகிறோம். உங்க ரெண்டு பேர் மூலமாக அதை அவர் செய்யலாம்.......

  அம்மா! அதனால, நீங்க ரெண்டு பேரும் எங்களை மன்னிச்சிடுங்க!......"

" போதும்டா, வரதா! எங்க கடமை, உங்களுக்கு சொல்ல வேண்டியது, அதை செய்துட்டோம், மற்றதை கடவுள் பார்த்துப் பார்! என நாங்களும் நம்பறோம்!

என்றைக்காவது உங்க முடிவை மாற்றிக்கிற எண்ணம் வந்தா, தெரிவிங்க! நாங்க வரோம், உதவிக்கு!"

-----------------------------  

10 comments

  • Super Uncle... Kadavul correct time la tharuvanga... Unmai than... Sila visayathai varathan pola yosichu seivathu nalathu than.. nice one..
  • அன்புள்ள Dhanu! இதயத்தை மகிழ்வில் நினைக்கிறது தங்கள் பாராட்டு! நன்றி!
  • குட் மார்னிங், டியர் அதர்வா! எனக்கு முன்பே நீங்கள் அனைவரும் படித்துவிட்டு பாராட்டியுள்ளது, மகிழ்ச்சி தருகிறது! இன்றைய நாள் இனிய நாள்! மிக்க நன்றி!
  • ஆழமான கருத்தை உள்ளடக்கிய அழகான கதை உணர்ந்து படித்தேன். மிக அருமை. தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா☺️👌
  • Rendume nalla concept uncle :hatsoff: 👏👏👏👏👏 rombha practical ah express seithu irukinga 👍 we can't fall for others desire..... We will get only what we deserve...<br />Likewise guru oda grandpa sonnadhum very much justifiable 👌<br /><br />Thank you and have a great evening.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.