(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”யார் சமைக்கறா நீயா”

  

”ஓ சரி நானே சமைக்கிறேன் போதுமா”

  

”ம் போதும்”

  

”சரி நான் கிளம்பறேன்”

  

”அவ்ளோதானா” என கேட்க அவளோ சிரித்தபடியே அவனின் கன்னத்தில் மெதுவாக ஒரு அடியை அடித்துவிட்டு

  

”யாராவது வரப்போறங்க நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட சரவணனோ கிறக்கமுடன் கட்டிலில் படுத்து உருண்டான்.

  

மறுநாள் விடிந்ததும் மலரோ தன் தாயிடம்

  

”அம்மா இன்னிக்கு லன்ச்க்கு நான் பக்கத்துவீட்டு ஆன்ட்டியையும் அவங்க பையனையும் கூப்பிட்டிருக்கேன்மா”

  

”அப்படியா நல்ல விசயம்தான்”

  

”லன்ச் நானே சமைக்கிறேன் தேவையான எல்லாம் இருக்கா இல்லை வாங்கனுமா அம்மா”

  

”வாங்கனும் காய்கறி இருக்கு ஆனா மளிகை வாங்கனும் மதியம் லன்ச்சுக்குதானே அதுக்குள்ள நான் கடைக்குப் போயிட்டு பொருள் வாங்கிட்டு வரேன் சமைச்சிடலாம்”

  

”சரிம்மா நீ ஒண்ணு பண்ணு, என்ன வேணுமோ லிஸ்ட் போடு நானே போய் கடையில வாங்கிட்டு வரேன்” என சொல்ல சந்தியாவும் லிஸ்ட் எழுதி மலரிடம் தர மலரும் அதை வாங்கிக் கொண்டு வெளியேறினாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.