(Reading time: 13 - 25 minutes)
சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்
சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்

சிறுகதை - கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்

  

சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி.

   

கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை.

   

ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு 'பாலிக மஹா வித்தியாலய' என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்!

   

சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து 'சறுக்கீஸ்' விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதி¡¢ லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும், வெற்றிலையும், அ¡¢சி, பருப்பு, கருவாடு விற்கிற கடைகள். சங்கக்கடை. 'சாளி'யின் சாப்பாட்டுக் கடை, ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு வாங்குகிறபடிக்கு வேலை; நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத வேலை!

   

ஓட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறியற்றுப் போன காட்டுக் கம்புகளும் கொண்டு சுவரெழுப்பி, தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள், விசாலமாகவே இருந்தன.

   

பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்துக் கூடுகிற சந்தை. அரசமரத்துக்குப் பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள். வாயகன்ற மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும், எருமைத்தயிரும் காற்றில் சுகந்தத் தாதுகளைப் பரப்பும்.

   

அடிக்கடி நினைத்துக் கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும், போகிற போக்கில் குசாலாக கண்ணடித்துவிட்டுப் போகிற விளையாட்டுக்காரப் பெண்ணைப்போல, சில நிமிட நேரங்களில் ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும்; துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதி¡¢.

   

எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி 'சாளி' கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில் நுழைந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.