இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற அபயக் குரல் எழுந்தது. சுவர்கள் அதிர்ந்தன.
கால்களைப் படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும். குரல் தேய்ந்து தேய்ந்து போக...இறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச, அதுவும் போய்...
பிறகு,
வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும்.
நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடிச் சென்றது. சூ¡¢யன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவந்தான்.
முரட்டு பூட்ஸ¤கள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலைப் பற்றி வலிந்து இழுத்தபடி சென்றனர்.
புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது, தொடைகளில் நடுவிலிருந்து குருதி பெய்தபடி...
சனங்கள் கந்தையை மறந்துபோய் இதைப் பார்த்தபடி நின்றனர். கையினால் ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் ஒன்று...பத்து...நூறு...கோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின.
காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...,
தனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகிச் சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில் மூக்குத் துவாரங்கள் பெரும் பொந்துகளெனத் தொ¢ய...,
பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோஒரு இரையைக் குறிவைத்துக் கவ்வவென வாயை 'ஆ'வெனப் பிளந்தபடி கள்ளத்தனமாக....,
எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின, குட்டியும் முற்றலுமாக...