விடவிடென்று நடந்து போவான். தென்னந் தோப்புகள் தொ¢யும். அழகியருத்தி ஒருக்களித்துச் சயனித்துக் கிடப்பதென நிலத்தைச் செதுக்கியிருந்தது. தோப்புகளுக்கிடையே பெயர் தொ¢யாத பற்றைகள். நம்மூ¡¢ன் பாவட்டைப் புதர்களை ஞாபகம் காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை. கம்புகள் வலு மிகுந்திருந்தன. இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதி¡¢. எறும்பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவட்டுப் பாதைகள் வகிடெடுத்துத் தொ¢யும்.
ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு பளபளவென்று திடுமென முன்னேவி¡¢யும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே பி¡¢ந்துவருகிற பாதை, மார்பின் நுனிக்காம்பில் வலதுகைப் பக்கமாக சுநீதா முதலாளியின் பேக்கா¢. இன்னும் போக ரோட்டுக்குக் கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதி¡¢ 'சளசள' சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும். பெயர் தொ¢யாத ஆறு. தண்ணீ¡¢ல் களிமண் நிறம் நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகிப் போகிறதென மலைச் சிகரமென்று ஆசைகாட்டும்.
மாங்கொட்டை போட்டுத் தத்தி தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்றுப் பற்களைப் போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு 'ஜல்' என்று நீர் சா¢ந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும் என்று விச்ராந்தியாக தலையை இதமாகத் திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம். உச்சியில் முத்தமிட்டுக் களைத்துப் பி¡¢ந்து போவதென 'ஓ'வென்று அழுதவாறு தண்ணீர் பாயும்.
மற்றபடி எங்கும் போலவே இவ்வூ¡¢லும் சனங்கள். சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழத் துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
திண்ணிய மார்புகளை இறுக்கிக் காட்டும் ரவிக்கைகளைப் பூட்டி, ஒற்றைச் சீத்தைத் துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்.
காய்ச்சிய தேங்காயெண்ணெய்யைப் பூசி தலைமயிரை வழித்தெடுத்து, பின்னுச்சியில் சிறு பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள், கடைசியில் 'களுசுருட்டு' கேட்பார்கள்.
ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளைப் புறாக்கள்